அஞ்சான் படத்தில் பட்ட அடியை தொடர்ந்தும் சூர்யா திருந்தவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘அஞ்சான்’ பட புரமோஷன் பேட்டியின் போது லிங்குசாமி, ‘கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் சூர்யா இந்தப் படத்தில் இறக்கி வைத்துள்ளார்’ என்று பேசினார். அவரது பேச்சு படத்திற்கே எதிராக முடிந்தது. அதேபோல்தான் ‘கங்குவா’ படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பாகவே கொடுக்கப்பட்ட பில்ட் அப், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது.
அதே போல தான் கங்குவா படத்திலும், “ரெண்டாயிரம் கோடி, technicians வாயை பிளப்பார்கள்” என்றெல்லாம் கூறி இந்த படத்திற்கும் மங்களம் பாடி விட்டார்கள். இதில் இன்னொரு கூத்து, படத்தை முழுசாக சூர்யாவுக்கு ஒட்டி காட்டாமல், கிலிம்ப்ஸ் விடியோவை மட்டும் காட்டி ஏமாற்றியுள்ளார் சிறுத்தை சிவா. இந்த நிலையில், தோல்வியை நினைத்து கலங்கி நிற்காமல், சூர்யா தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
வேற லெவல் குத்து
சமீபத்தில், சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. அந்தமான், ஊட்டி என பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் லவ் கதை ஒன்றை இயக்கினால் எப்படி இருக்குமோ, படம் அப்படி இருக்கும் என்று ரொம்ப தெளிவாக பதில் கூறுவதாக நினைத்து உண்மையை உடைத்துவிட்டார். இந்த 42 வயதான அழகு நடிகை ஒருவர், தற்போது exclusive அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
90ஸ் கனவு கண்ணி, ஷ்ரேயா சரண் சூர்யா-44 படத்தில், வேற லெவல் குத்தாட்டம் போடவிருக்கிறார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். என்ன பெரிய ஸ்ரீ லீலா, எங்க தலைவி நலினம் யாருக்காவது வருமா என்று இந்த செய்தியை கேட்டதிலிருந்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.