பார்த்திபனை மிரட்டிய தேவயானியின் அம்மா.. கடைசில ஆப்பு வச்சதே ராஜகுமாரன் தானே

Parthiban: இயக்குனரும் நடிகை தேவயானியின் காதல் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்கிய நீ வருவாய் என திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்.

சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே நடிகை தேவயானியிடம் இந்த படத்தின் கதையை பற்றி சொல்லியிருக்கிறார். பின்னர் தேவயானி, பார்த்திபன், அஜித் என நட்சத்திர பட்டாளங்களுடன் இந்த படம் உருவானது.

பார்த்திபனை மிரட்டிய தேவயானியின் அம்மா

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தேவயானியின் அம்மா பார்த்திபனை மிரட்டி இருக்கிறார். அதாவது பார்த்திபனும் ஒரு இயக்குனர் என்பதால் அதிகமாக படத்தின் கதை மட்டும் காட்சிகளில் தலையிடம் பழக்கம் இவருக்கு இருக்கிறதாம்.

இது தேவயானியின் அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், பார்த்திபனை அழைத்து இது நம்ம பையன் படம், எந்த தொந்தரவும் பண்ண கூடாது என்று எச்சரித்தாராம். பாவம் கடைசியில் ராஜகுமாரன் தான் தன் மகளை காதலித்து திருமணம் செய்ய போகிறார் என்பது தேவயானியின் அம்மாவுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Leave a Comment