வாழும் நம்பியாராய் இருக்கும் ஏ ஆர் ரகுமான் மீது இப்படி ஒரு பழியா.. மனைவிக்காக ஆஸ்கர் நாயகன் செய்த செயல்

ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரது விவாகரத்து பற்றிய செய்தி தான் சமீபத்தில் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக். அவரது மனைவி சாய்ரா பானு மிகத் தனிமையாக இருப்பதை உணர்ந்து வருகிறேன் என கூறி இந்த விவாகரத்தை கேட்டுள்ளார. ஏ ஆர் ரகுமான் சினிமாக்காரர் என்பதாலேயே இப்பொழுது இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஏ ஆர் ரகுமான் அடிக்கடி வெளிநாடு செல்லக்கூடியவர். அதேபோல் இரவில் அதிக நேரம் பணி செய்யக்கூடியவர். இப்படி பணி செய்வதால் காலையில் தான் இவருக்கு ஓய்வு. இதனாலே அவருக்கு நம்மளை போல நார்மலான வாழ்க்கை இல்லை என்பது
தெளிவாக தெரிகிறது.

சாய்ரா பானு, ஏ ஆர் ரகுமான் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை எடுத்து விட்டனர். ஏ ஆர் ரகுமான் சினிமா பின்புலத்தில் இருந்து வந்ததாலேயே இப்பொழுது இந்த விவாகரத்து பற்றி நிறைய பேர் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமானிடம் வேலை செய்யும் கிட்டாரிஸ்ட் பெண் ஒருவருடன் அவரை சம்பந்தப்படுத்தி பேசி வருகிறார்கள். அவரும் அதற்கு ஏற்றார் போல் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து முடிவை அறிவித்தவுடன் அந்தப் பணிப்பெண்ணும் அவரது கணவருடன் விவாகரத்து அறிவித்துள்ளார். இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் முடிச்சு போடுகிறார்கள்.

சினிமாவில் மிகவும் கண்ணியமான மனிதராய் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஒரு காலத்தில் நம்பியார் எப்படி பக்தி, மற்றும் கண்ணியத்துக்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டாரோ அதை போல் மிகவும் பக்தி கண்ணியமானவர் ரகுமான்.அவரது மகள் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் மும்பையில் அம்மா தனியாக இருக்கிறார் அவருக்கு வீடு மற்றும் தேவைகளை செய்து கொடுங்கள் என கூறி உள்ளாராம்.

Leave a Comment