வந்த வேகத்துல வாய்ப்பை வாரி சுருட்டிய இளம் ஹீரோயின்.. பொறாமையில் போட்டி நடிகைகள் செய்த வேலை

Gossip: ஆரம்பத்தில் பெரிய அளவில் கவனம் பெறாத அந்த நடிகை இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அதிலும் இப்போதைய இளைஞர்களின் கனவு கன்னி என்றால் அது அவர்தான்.

சமீபத்தில் மாஸ் ஹீரோவுடன் அவர் நடித்திருந்தது வரவேற்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கான வெற்றியை தேடி கொடுத்துள்ளது. அதனாலேயே இப்போது அவரை கமிட் செய்ய ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தனைக்கும் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் என எந்த விஷயத்திற்கும் சம்மதிக்க மாட்டார். ரொம்பவும் விவரமாக வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் இவர் கைவசம் இப்போது பல படங்கள் இருக்கிறது.

நடிகையின் வளர்ச்சி பிடிக்காத ஹீரோயின்

வந்த வேகத்திலேயே இப்படி வாய்ப்பு எல்லாத்தையும் வாரிசுருட்டிய நடிகை மேல் சிலருக்கு பொறாமையும் இருக்கிறது. அதிலும் கிரஷ் நடிகைக்கு இவர் மீது ஏகப்பட்ட கடுப்பாம்.

உயர்ந்த நடிகை கூட டென்ஷனில் தான் இருக்கிறார். ஏனென்றால் அவர் நடிக்க வேண்டிய படத்தில் திடீரென நடிகை நுழைந்தது இப்போது வரை அவரால் தாங்க முடியவில்லை. அதனால் இங்கே சில நடிகைகள் சேர்ந்து இவரை பற்றி புது புரளி ஒன்றை கிளப்பி விட்டுள்ளனர்.

அதாவது நட்சத்திர குடும்பத்திற்கு இவர் மருமகளாக போகிறார் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இதனால் அவருடைய மார்க்கெட் தடைப்படும் என நடிகைகள் வில்லங்கமாக யோசித்து இருக்கின்றனர். ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத நடிகை தன் வேலையை பார்த்து வருகிறார்.

Leave a Comment