நீலாம்பரியை மிஞ்சிய நயன்தாராவின் சாதுரியம்.. ஆகாஷ் பாஸ்கர் கல்யாணத்தில் தனுசை அசிங்கப்படுத்திய ராக்காயி

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஓனர் ஆகாஷ் பாஸ்கரின் கல்யாணம் நேற்று நடைபெற்றது. இவர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை செய்தவர். தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

இப்படி இருவருக்கும் நெருங்கிய நண்பரான ஆகாஷ் பாஸ்கர் திருமணத்திற்கு தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரையும் அழைத்திருந்தார். ஒரே சமயத்தில் இருவரும் கல்யாண வீட்டிற்கும் வந்தனர். அங்கே தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

உள்ளே வந்த நயன்தாரா, அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் நேராக அங்கே அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியிடம் பேச சென்றார். அவர் காதுகளில் ஏதோ பேசிக்கொண்டு நிகழ்ச்சி அமைப்பாளரை கூப்பிட்டு தனுஷ் அருகே தனக்கு இருக்கை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

நயன்தாரா இப்படி கேட்டதற்கினங்க தனுஷ் இருக்கை அருகே அவருக்கும் இருக்கை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு தனுஷ் பக்கம் பார்த்து கால் மேல் கால் போட்டு அழிச்சாட்டியம் செய்துள்ளார். படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல் நயன்தாரா திமிரின் உச்சம் இருந்ததாம்.

இப்படி செய்தது மட்டும் போதாது என்று நயன்தாரா கூட வந்த ஆட்களிடம் அப்படி தனுஷ் பக்கத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் போட்டோக்களையும் எடுக்க சொல்லி சமூக வலைதளத்தில் உடனே போடவும் சொல்லி இருக்கிறார். இப்படி தனுசை அசிங்கப்படுத்தவே கங்கணம் கட்டிக்கொண்டு கல்யாணத்துக்கு வந்திருக்கிறார்.

Leave a Comment