2025 Government Holidays : டிசம்பர் மாதம் வந்தாலே அடுத்த வருடத்திற்கான விடுமுறை நாட்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எண்ண ஆரம்பித்து விடுவார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் பற்றி பார்க்கலாம்.
2025-இல் மொத்தம் 23 அரசு விடுமுறை நாட்கள் உள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கில புத்தாண்டு. மேலும் 14 பொங்கல் பண்டிகை தொடங்கி 16 உழவர் திருநாள் வரை விடுமுறை. மேலும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாள் அரசு விடுமுறை. ஆகையால் ஜனவரி மாதம் மட்டும் ஐந்து நாட்கள் விடுமுறை.
அடுத்ததாக பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தைப்பூச திருவிழாவால் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மறுநாள் 31 ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
2025 இல் விடுமுறை நாட்கள் விவரம்
அதோடு ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. மே ஒன்று உழைப்பாளர்கள் தினம் என்பதால் இந்த மாதத்தில் ஒரு விடுமுறை நாள் மட்டும் அமைந்துள்ளது. ஜூன் 7 பக்ரீத் பண்டிகை மற்றும் ஜூலை 6 மொகரம் பண்டிகை அமைந்திருக்கிறது.
அடுத்ததாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்களாக வருகிறது. ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் செப்டம்பர் 5 மிலாடி நபி என்பதால் விடுமுறை. அக்டோபர் 1 ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை. நவம்பர் மாதம் ஒரு விடுமுறை கூட அமையவில்லை. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த வருடம் ஞாயிற்றுக்கிழமை 3, திங்கட்கிழமை 3, செவ்வாய் கிழமை 3, புதன் 4, வியாழன் 6, வெள்ளி 3 மற்றும் சனி 2 ஆகிய கிழமைகள் விடுமுறையாக அமைந்துள்ளது.