தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்குகிறார். இதை ஒரு பான் இந்தியா படமாக தயாரிக்க உள்ளனர்.அனைத்து தரப்பு ஆடியன்ஸுக்கும் இந்த படம் பிடிக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதனால் கதையை அப்படி அமைக்குமாறு வினோத்திடம் கேட்டுக் கொண்டார்.
படம் அரசியல் சம்பந்தமான கதை இல்லை. மாறாக இந்த படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறாராம். ஏற்கனவே ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படமும் பான் இந்தியா படமாக தான் வெளிவந்தது.
ஜெய்லர் படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் போன்றவர்கள் நடித்து மிரட்டி இருந்தனர். இப்பொழுது தளபதி 69 படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார். விஜய்க்கு கர்நாடகாவில் பெரிய மார்க்கெட் நிலவி வருகிறது. இது பான் இந்தியா படம் என்பதால் சிவராஜ் குமாரை வைத்து கர்நாடகா மார்க்கெட்டையும் பிடிப்பதற்கு திட்டம் போடுகிறார்கள்.
கர்நாடகாவில் சிவராஜ்குமாருக்கு நல்ல மாஸ் இருக்கிறது அதனால் தளபதி 69 படத்தில் நடிக்கும் அவரை வைத்து எளிதில் வியாபாரம் செய்து விடலாம். எப்படி பார்த்தாலும் விஜய் படங்கள் தமிழ்நாட்டில் கோடிகளில் பிசினஸ் ஆகிவிடும். இப்பொழுது கர்நாடகாவையும் வழைத்து போட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பொழுது ரஜினி படம் அதிகம் வசூலிக்கிறதா இல்லை விஜய் படமா என்பதில் ஒரு பெரிய போட்டியே நிலவி வருகிறது. ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடிகள் வரை வசூல் செய்தது.இப்பொழுது சிவராஜ்குமார் போன்ற மாஸ் நடிகர்களை போட்டு ஒட்டுமொத்தமாய் வசூலை வாரி குவிக்க திட்டமிடுகின்றனர்.