Chinna Marumagal Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சின்ன மருமகள் சீரியலில், நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்பு தான் நம்மளுடைய மூலதனம் என்பதற்கு ஏற்ப தமிழ் அவருடைய டாக்டர் படிப்பை கனவாக வைத்திருந்தார். ஆனால் தமிழை பார்த்து சேது காதலிக்க ஆரம்பித்த நிலையில் வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். சேதுவின் அப்பாவும் மகனுக்காக பணம் வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை தன் மகன் சந்தோஷம் தான் முக்கியம் என்று தமிழ் குடும்பத்திடம் சம்பந்தம் பேசினார்.
தமிழ் அப்பா தினமும் குடித்துவிட்டு பொறுப்பான அப்பாவாக இல்லாமல் இருந்தார். ஆனால் தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது என்பதற்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்து ராஜாங்கம் விட்டு மருமகளாக ஆக்கிவிட்டார். அதன் பின் தமிழ்கனவை நிறைவேற்றும் விதமாக சேது படிக்க வைப்பதற்கு முயற்சி எடுத்தார்.
ஆனால் அதற்குள் தமிழ், ராஜாங்கத்திற்கு எதிராக செய்த ஒரு விஷயம் வெளியானதால் மொத்த குடும்பமும் தமிழ் மீது கோபமாக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோபத்தை குறைத்துக் கொண்டு தமிழ் ஒரு நல்ல மருமகள் என்ற பெயரை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் 12ஆம் கிளாஸ் எக்ஸாமுக்கு போகணும் அதற்கு யாரிடம் பெர்மிஷன் வாங்கணும் என்று தெரியாது நிலையில் பாட்டியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
எனக்கு வரப் போற எக்ஸாமுக்கு கூட்டிட்டு போகணும் என்று கேட்டிருந்தார். அதனால் பாட்டியும் தமிழின் ஆசையை நிறைவேற்றும் விதமாக வீட்டில் நெஞ்சுவலி போல் ஒரு டிராமா போட்டு விட்டார். அந்த டிராமாவை நம்பிய சேது, தமிழ் மற்றும் பாட்டியை கூட்டிட்டு கிளம்பி விட்டார். வழியில் பாட்டி காரை நிப்பாட்ட சொல்லி எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்கிறேன்.
எனக்காக நீ ஒரு விஷயம் பண்ண வேண்டும் தமிழ் எக்ஸாம் எழுத போகும் ஸ்கூலில் எங்களை விட வேண்டும் என்று கேட்கிறார். ஆரம்பத்தில் யோசித்த சேது, பாட்டி சொன்னதை தட்ட முடியாமல் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். தமிழ் ஆசைப்பட்ட மாதிரி எக்ஸாம் எழுதுவதற்கு தயாராகிய நிலையில் அங்கே சிறப்பு விருந்தினராக ராஜாங்கம் எக்ஸாம் கொஸ்டின் பேப்பரை கொடுப்பதற்கு வருகிறார்.
இதனை பார்த்த பாட்டி மற்றும் சேது என்ன செய்வது என்று தெரியாமல் மறைந்திருந்து பார்க்கிறார்கள். அதே மாதிரி தமிழும் மாமனாரிடம் மாட்டிக் கொண்டால் பிரச்சினையாகி விடும் என்று பதட்டத்துடன் இருக்கிறார். அந்த வகையில் எவ்வளவு நாளைக்கு தான் இந்த உண்மையை மறைக்க முடியும் என்பதற்கு ஏற்ப தமிழ் எக்ஸாம் எழுத வந்திருப்பதை ராஜாங்கம் பார்த்து விட வாய்ப்பு இருக்கிறது.
அத்துடன் படிப்பு ரொம்ப முக்கியம் அதுவும் பெண்களுக்கு கல்வி ரொம்ப அவசியம் என்று முடிவெடுத்து ராஜாங்கம் வீட்டிற்கு மருமகளாக வந்த தமிழ் ஆசைப்பட்டபடி டாக்டர் படிப்பை படிக்க வைத்து கனவை நிறைவேற்றலாம் என்று பெர்மிஷன் கொடுத்து படிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது.