இன்னைக்கு தேதிக்கு மக்கள் எல்லோருமே ரொம்ம புத்திசாலியாத்தான இருக்காங்க. ஏன்ன? எந்த படம் நல்லா இருக்கு அப்பிடீங்கிறதுல இருந்து, யாருக்கு ஓட்டுப் போடலாம்னு யோசிக்கிற வரையில் ரொம்ப சிந்தித்துத்தான் செயல்படறாங்க.
ஏன்ன தமிழ் நாட்டுல ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கு. ஆனாலும், இன்னும் திமுக, அதிமுக ஆகிய ரெண்டு கட்சிகளை தாண்டி இன்னும் வேறெந்த கட்சியும் முதல்வர் சீட்டில இந்த 60 வருசமா உட்காரல. அப்படீனா, நமக்கான தேவை திராவிட கட்சிகள்னு மக்கள் புரிஞ்சி வைச்சிருக்காங்களா? இல்லை மத்த கட்சிகள் இருந்தாலும் அவுங்களுக்கு ஓட்டுப் போட்டாலும் பிரஜோஜனமில்லைன்னு அப்படி நினைச்சு ஓட்டுப் போட மாட்டிங்கறாங்கலான்னு தெரியல.
ஆனால், பல பிரபலங்கள், சினிமா நடிகர்கள் என எல்லோருமே அரசியலுக்கு வரனும்னு ஆசைப்படறாங்க. வந்ததுக்கு அப்புறம்தான் கட்சி சின்னத்தை தக்க வைக்கனும், குறைச்ச பட்சம் இத்தனை விழுக்காடு ஓட்டுகள் வாங்கனும், தேர்தல்ல ஜெயிக்கனும் இதெல்லாம் சவாலா இருக்கும்.
பாஜகவுடன் நாம் தமிழர் கூட்டணி? ரஜினிகாந்த் ஆதரவு
அப்படி சினிமாவில இருந்து அரசியலுக்கு வந்த சீமான், தமிழ் தேசியக் கொள்கையில் ரொம்பத் தீவிரமானவர். இதுவரை 10 ஆண்டுகளுக்கு மேலா அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரா இருந்தாலும், இன்னும், ஒரு தொகுதியில கூட அவரோ, அவரோட கட்சியோ ஜெயிக்கல. ஆனால் யாரோடவும் கூட்டணியும் வைக்கல.
நாம் தமிழர் கட்சிக்கு, சீமானோட பேச்சுக்கும் நிறைய இளைஞர்கள் மாநாட்டில கூடறாங்க. கைதட்டறாங்க. அவரை சமூக வலைதளங்களிலும் ஃபாலோ பன்றாங்க. ஆனால், ஓட்டு சதவீதம் சமீபத்தில நடந்த லோக்சபா தேர்தல்தான் அதிகரிச்சுச்சு. இத்தனை வருசமா? ஒரு தொகுதியில கூட ஜெயிக்கலன்னு பலரும் விமர்சிக்கறாங்க.
இந்த நிலையில், தமிழக வெற்ற்றிக் கழகம் கட்சி தொடங்கிய விஜய், முதல் மாநாட்டில சீமான சீண்டினதால, சீமானும், விஜய்யை ஒவ்வொரு மேடையிலும், செய்தியாளர் சந்திப்பிலும் விமர்சிக்கிறாரு. தவெகவுக்கு கூடிய கூட்டமும், தன்னை விட அதிக ஓட்டுகளை வரும் தேர்தல்ல விஜய் கட்சி வாங்கியிருமோன்னு சீமான் யோசிக்கிறாரோ அப்பிடீன்னு அரசியல் விமர்சகர்கள் கூறிட்டு வர்றாங்க. அதுக்கு ஏத்த மாதிரிதான் விஜய் வாக்காளர் முகாம்களை அமைச்சு தொண்டர்களையும் கட்சியில உறுப்பினராக இணைச்சிட்டு வர்றாரு.
அதுனால நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் பதறிட்டு இருகிறதா கூறப்படுது. இந்த சமயத்துல, சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திச்சு பேசியிருக்காரு. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல நடந்த சந்திப்புல, சினிமா, அரசியல்னு நிறைய பேசிருக்காங்க. அதுல,’’ பாஜகவுடன் நாம் தமிழர் கூட்டணி சேர தயார், ஆனால் முதல்வர் வேட்பாளரா என்னைத்தான் அறிவிக்கனும் அப்டீனு சீமானும் நிபந்தனை விதிக்க, அதை கேட்ட ரஜினி, இதுசம்பந்தமாக பாஜகவிடம் பேசறதா வாக்குறுதி அளிச்சிறுக்காருன்னு’’ ஒரு பிரபல பத்திரிக்கையில போட்டிருக்காங்க.
சீமானுக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு?
ஏற்கனவே, சீமானுக்கும், அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு இருக்கு. அதுலையும், தமிழ்த் தேசியம் நாம் தமிழர்ன்னா, இந்திய தேசியம் பாஜகவோட கொள்கை. இதுல எப்படி ரெண்டு கட்சியும் இணைஞ்சிருக்க முடியும்? அப்படி இருந்தாலும் எத்தனை நாளுக்கு இருக்கும்னு பலரும் கேள்வி எழுப்பறாங்க.
அதேசமயம, பல தேர்தலில், பல தோல்விகள் சந்தித்து பொருளாதார இழப்புகளும் அதிகம் தொண்டர்களும் மத்த கட்சிகளுக்குப் போயிட்டிருக்கறதால, வரும் தேர்தலில், திமுக, அதிமுக, தவெகனு கடும் போட்டியிருக்கும். அதுனால, சீமான், தேசிய கட்சியான பாஜகவோட கூட்டணியில சேரவும் வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. இதெல்லாம் காலம் தான் முடிவு செய்யும்.