எதிர்நீச்சல் சீரியலுக்கு அடுத்து மக்கள் மனதை கொள்ளையடித்த ஒரு சீரியல்.. சிம்மாசனத்தில் ஜொலிக்கும் சன் டிவி

Sun Tv Serial: எத்தனை சீரியல்கள் வந்தாலும் சில சீரியல்களை மறக்கவே முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியின் ஃபேவரிட் சீரியலாக மக்கள் மனதில் இடம் பிடித்தது. ஆனால் அதை இன்னும் அதிகளவில் எதிர்பார்க்கும் தருணத்தில் அதை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள். இதனால் மறுபடியும் எதிர்நீச்சல் சீரியல் வேண்டும் என்று இரண்டாம் பாகத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு அடுத்தபடியாக இன்னொரு ஒரு சீரியல் மக்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறது. அதுவும் இந்த சீரியல் தான் சிம்மாசனத்தில் ஜொலித்து வருகிறது. அது என்ன சீரியல் என்றால் அன்பு ஆனந்தி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான். இடையில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டாலும் தற்போது வரும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் அன்பு தான் அழகன் என்ற உண்மை ஆனந்திக்கு தெரிந்து விட்டது. அத்துடன் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் மனதார காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த உண்மை மகேஷ்க்கு தவிர மற்ற எல்லாத்துக்கும் தெரியும். அதே நேரத்தில் மகேஷ் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து மறுபடியும் ஆனந்தியை அன்பு வீட்டில் தங்கச் சொல்லிவிட்டார்.

ஆனால் இப்பொழுது தான் அனைவரும் அதிர்ச்சியாகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. அதாவது ஆனந்தியின் கர்ப்பம் விஷயம் வெளிவரப் போகிறது. ஆனால் இதற்கு காரணமான மகேஷ் ஈசியாக தப்பித்த நிலையில் அனைவரும் அன்புவை குற்றம் சாட்டப் போகிறார்கள். ஏற்கனவே அன்பு வீட்டில் தான் யாருக்கும் தெரியாமல் ஆனந்தி தங்கி இருந்தார்.

போதாதகுறைக்கு இப்பொழுது இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து முடிச்சு போட்டு மொத்த பழியும் அன்பு மீது விழப் போகிறது. இதை ஆனந்தி மற்றும் அன்பு எப்படி எதிர்கொண்டு சமாளிக்க போகிறார் என்ற விஷயத்தில் கதை சுறுசுறுப்பாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தான் இந்த நாடகம் தற்போது அனைவருக்கும் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது.

Leave a Comment