20 வருட திருமண வாழ்க்கைக்கு தனுஷ்-ஐஸ்வர்யா வைத்த முற்றுப்புள்ளி.. சட்டபூர்வமாக வெளிவந்த தீர்ப்பு

Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான தனுஷ் சினிமாவில் இப்போது முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்திருந்தனர்.

இது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் மீண்டும் இந்த ஜோடி இணைந்து விடுவார்கள் என பலரும் நம்பினார். அதேபோல் குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொள்வதை பார்க்க முடிந்தது. அதோடு சமீபத்தில் வேட்டையன் படத்திற்கு ரசிகனாக முதல் நாளே தனுஷ் படம் பார்க்க சென்றிருந்தார்.

சட்டபூர்வமாக பிரிந்த தனுஷ், ஐஸ்வர்யா

மேலும் பலமுறை இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து விடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இன்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து வழங்கி இருக்கிறது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

அதில் 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நடந்த திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 20 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டபூர்வமாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர்.

சமீபத்தில் தனுஷுக்கு நயன்தாராவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்று நெட்ஃபிளிக்ஸ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். இந்த சூழலில் தனுஷின் சட்டபூர்வமான விவாகரத்துச் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது.

Leave a Comment