Memes: இந்த வாரத் தொடக்கத்திலிருந்து மழை வெளுத்து வாங்குகிறது. தமிழகம் முழுவதும் அதிகபட்ச மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை திருவாரூர் நாகை கடலூர் என பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து நகரும் இந்த புயல் இன்று காலை தமிழக கடற்கரைக்கு வரும் என கணிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவில் இருந்து ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலையில் 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கியது.
இதனால் இது புயலாக வலுப்பெறுமா அல்லது வலுவிழந்து கரையை கடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இது கரையை கடக்கும் என செய்திகள் வெளியானது.
ஆனால் இப்போது அது புயலாக மாறுவதில் தாமதம் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனென்றால் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இப்படி இழுத்துக் கொண்டே போகும் நிலையில் நெட்டிசன்கள் இப்ப வருமோ எப்ப வருமோ என மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.
அதேபோல் இவ்வளவு சோம்பேறியாவா இருக்கிறது. சீக்கிரம் வந்தா தானே நாங்க அடுத்த கட்ட வேலையா பாக்க முடியும். இப்படி இழுத்துக்கிட்டே போனா என்ன பண்றது என சிலர் புயலை பங்கம் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.