ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கசாப்பு கடையில் ரோகினியின் மாமாவை சந்தித்த மீனா.. விஜயா செய்யும் பரிகாரம், நடுரோட்டுக்கு வரப்போகும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா வீட்டில் மோட்டர் ரிப்பேர் ஆகியதால் அனைவரும் வேலைக்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டது என்பதால் குளித்துவிட்டு கிளம்புவதற்கு தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள். அந்த வகையில் முத்து மற்றும் மீனா வெளியே போய் தண்ணி பிடித்து விட்டு வருகிறார்கள். அதே மாதிரி ரவி, ரோகினி மற்றும் மனோஜும் தண்ணி பிடித்து வருகிறார்கள்.

அப்பொழுது மோட்டாரை சரி செய்வதற்காக முத்து எலக்ட்ரீஷனை கூப்பிடுகிறார். அவரும் வந்து சரிபார்த்த நிலையில் அதற்கு தேவையான பொருளை கடைக்கு போய் வாங்கிட்டு வருகிறேன். அதுவரை மெயின் சுவிட்ச்யை ஆஃப் பண்ணிட்டு போகிறேன். யாரும் ஆன் பண்ணி விட வேண்டாம் என்று முத்துவிடம் சொல்லிவிட்டு போகிறார். முத்து சரி என்று சொல்லி அதை வீட்டில் இருப்பவரிடம் சொல்லாமல் குளிக்க போய்விடுகிறார்.

ஆனால் மனோஜ் வேலை முடிந்து விட்டது இன்னும் சுவிட்ச் ஆஃப் பண்ணி இருக்கிறது என்று நினைத்து ஆன் பண்ணி விடுகிறார். அப்பொழுது விஜயா கரண்ட் வந்துவிட்டது என்று நினைத்து ஃபேன் போடுவதற்காக சுச்சியில் கை வைக்கிறார். அதனால் ஷாக் அடித்து விட்டது, இது தெரியாத பார்வதி விஜயாவை தொட்டு விடுகிறார். அதே மாதிரி ரோகிணியும் பார்வதியை தொட்டு விட்டதால் இவர்களுக்கு கரண்ட் ஷாக் அடித்து விட்டது.

இது தெரியாத மனோஜ், ஸ்ருதி மற்றும் ரவி அனைவரும் கரண்ட் ஷாக்கில் ஒன்று போல மாட்டிக் கொண்டார்கள். பிறகு அடுப்பாங்கரையில் இருந்து வந்த மீனா, கரண்ட் ஷாக் அடித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டு கையில் ஒரு மட்டை கம்பை எடுத்து விஜயா கையை ஓங்கி அடிக்கிறார். பிறகு அனைவரும் ஒட்டுமொத்தமாக கீழே விழுந்து தப்பித்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் மனோஜ் ஷோரூம் இல் வைக்கப்பட்ட சூனியம் முட்டையை பற்றி விஜயாவிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஏற்ற பரிகாரத்தையும் ஜோசியரிடம் கேட்டு வந்து விட்டேன். நாம் இருவரும் பூச்சட்டி எடுக்க வேண்டும். அதற்கு முன் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதை என்னால் செய்ய முடியாது என்று விஜயா மறுத்துவிட்டார்.

அப்படி வீட்டிற்குள் வரும் பொழுது திடீரென்று மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் கீழே விழுந்து விடுகிறது. ஒரு அடி விஜயா நகராமல் இருந்திருந்தால் அந்த பேன் மேலே விழுந்திருக்கும். உடனே இதுதான் சான்ஸ் என்று ரோகிணி மற்றும் மனோஜ் இதெல்லாம் வைக்கப்பட்ட சூனியத்தின் வேலையாக இருக்கும். அதனால் நம் உடனடியாக அந்த பரிகாரத்தை செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொல்லி விஜயாவை பயமுறுத்தி குழப்பி விடுகிறார்கள்.

அதன்படி விஜயா மற்றும் மனோஜ் விரதம் இருந்து பரிகார பூஜையே செய்யப் போகிறார்கள். ஆனாலும் மனோஜ் செய்த ஆடம்பர செலவுக்கும் அதிகமான கடனுக்கும் சேர்த்து மொத்தமாக ஷோரூமில் நஷ்டப்பட்டு ஜோசியர் சொன்னபடி நடுரோட்டுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி மீனா வீட்டிற்கு தேவையான மாமிசத்தை வாங்குவதற்கு தோழியை கூட்டிட்டு கடைக்கு போகிறார்.

அப்பொழுது மீனாவுக்கு போன் வந்ததால் கடையில் இருந்து கொஞ்சம் தள்ளி போன் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் தோழி மீனாவுக்கு தேவையான கரியை வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த கடை தான் ரோகிணி மாமா என்று நடிக்க வந்த பிரவுன் மணியின் கசாப்பு கடை. பிரவுன் மணியும் மீனாவை பார்த்து விடுகிறார், மீனாவும் பிரவுன் மணியை சந்தித்து விடுகிறார். ஆனாலும் யாரோ மாதிரி ப்ரோன் மணி பேசி தப்பிக்க முயற்சிக்கிறார்.

இருந்தாலும் மீனாவுக்கு வந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக நடந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லப் போகிறார். அந்த வகையில் முத்துவுக்கு வரும் சந்தேகத்தின் அடிப்படையில் இங்கிருந்து விசாரணை பண்ணலாம் என்பதற்கு ஏற்ப பிரவுன் மணியை தேடி கண்டுபிடித்து ரோகினி நடிக்க கூப்பிட்ட விஷயத்தை தெரிந்து கொள்ளப் போகிறார். அடுத்து எதற்காக இந்த பார்லர் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக அடுத்தடுத்து முத்து பிளான் பண்ணி ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிக்க போகிறார்.

Trending News