Memes: இதோ அதோ என வானிலை ஆய்வாளர்களையும் ஊடகங்களையும் சுத்தலில் விட்ட புயல் ஆட்டத்தை காட்ட தயாராகி விட்டது. இன்று சென்னையில் காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் நாளை பல இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் பூங்கா கடற்கரைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல் விழுப்புரம் மயிலாடுதுறை கடலூர் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது எப்படி இருக்க அலுவலகம் செல்பவர்கள் எங்க பாதுகாப்பு முக்கியமில்லையா எங்களுக்கும் லீவு விட சொல்லுங்க என அலப்பறை கொடுத்து வருகின்றனர். அதே சமயம் சனிக்கிழமை புயல் வந்துள்ளதால் பலருக்கு வருத்தம் தான்.
ஏனென்றால் ஐடி அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களுக்கு கூட சனிக்கிழமை விடுமுறை நாளாக இருக்கும். இந்த நேரம் பார்த்து இந்த புயல் வந்துவிட்டது. திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை வந்திருக்கக் கூடாதா என சிலர் புலம்புகின்றனர்.
இன்னும் சிலர் சனி புயல் தனியா வராதாமே ஒரு வேளை இன்னும் ரெண்டு பின்னாடியே வருமோ என அதிர்ச்சி கொடுக்கின்றனர். இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.