வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பெரிய வீட்டு மருமகள் ஆகிறாரா சமந்தா? கோலிவுட் முதல் பாலிவுட் வரை இதான் பேச்சு!

எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்தாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் சமந்தா. நடிகை சமந்தா பிரபல நடிகை காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகும் நிலையில், அதுகுறித்து இதில் பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்தவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு இரண்டிலும் சரளமாகப் பேசக்கூடியவர். அவர் மேல்படிப்பு முடித்தவுடன் கல்விக் கடனை என்னால் கட்ட முடியாது எனத் தந்தை கூற, அதைக் கேட்டு, தானே அதை அடைக்க, சினிமாவுக்குள் சமந்தா நுழைந்ததாகவும் அதன் பின் தன் வாழ்க்கையே மாறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சினிமாவில் சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார். அதன்பின், நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, பிரிந்தாவனம், அஞ்சான், கத்தி, 24, சீமராஜா, குஷி, யசோதா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்துக்கு பின் சமீபத்தில் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனா, சமந்தா பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரும் காதல் வலையில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் அர்ஜுன் கபூருடன் காதல்? நெட்டிசன்கள் கேள்வி

அதாவது பிரபல பாலிவுட் நடிகர் சமந்தா தன் இன்ஸ்டாவில் ஒரு கவிதையை பதிவிட்டிருந்தார். அது தனக்கு எப்போதும் வழிகாட்டியாக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பிரபல பாலிவுட் தயாரிப்பாளார் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் கமெண்ட் பதிவிட்டிருந்தார். அதில், இக்கவிதையை நான் என் சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறேன்.

எனக்கு உந்துதல் தேவைப்படும் போது உதவியதாக கூறியிருந்தார். இதற்கு சமந்தா, வெள்ளை நிற ஹார்ட் இமொஜியை பதிவிட்டிருந்தார். தற்போது 39 வயதாகும் அர்ஜூன் கபூர், இதற்கு முன் தன்னிலும் 12 வயது மூத்தை மலைகா அரோராவுட்ன் காதலி இருந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரேக் அப் ஆனது.

தற்போது அர்ஜீன் கபூரும், சமந்தாவும் டேட்டிங் செய்து வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையே காதல் இருக்கிறதா? இல்லையா என்பதை அவர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Trending News