ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் மீண்டுமா, பார்க்கிங் ஏரியாவாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

Fengal Cyclone: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் சேதாரம் இருக்காது. ஆனால் சென்னை சாதாரண மழைக்கே ஒரு வழியாகிவிடும். அதுவும் கனமழை என்றால் சொல்லவே வேண்டாம்.

பல இடங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலைதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எரி குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் தான். இதனால் ஓடுவதற்கு வழியில்லாமல் மழை நீர் வீடுகளை சூழ்ந்துவிடும்.

அதிலும் டிசம்பர் மாதம் வந்தால் சென்னையின் நிலைமை கவலைக்கிடம் தான். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

மீண்டும் பார்க்கிங் ஏரியாவாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்

அதில் வேளச்சேரி பள்ளிக்கரணை ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாகவே மக்கள் இந்த வருடம் உஷாராகி விட்டார்கள். கடந்த மாதம் சென்னைக்கு மழை காரணமாக ரெட் அலர்ட் விடப்பட்டது.

அப்போது வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் தங்கள் கார்களை பார்க் செய்து மீடியாக்களின் கவனத்தை பெற்றார்கள். மழை நீரில் சேதாரம் ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய நேரிடும். அதனால் பாதுகாப்பிற்காக இங்கு வந்து பார்க் செய்து விட்டோம்.

இதற்காக பைன் போட்டால் கூட பரவாயில்லை என அதிரடி காட்டினார்கள். அதை அடுத்து மழை ஒரு நாளிலேயே வேறு திசை நோக்கி சென்று விட்டது. இருப்பினும் இரண்டு நாட்கள் கழித்து தான் உரிமையாளர்கள் கார்களை எடுத்துச் சென்றனர்.

தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்றிலிருந்து கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் மீண்டும் உஷாரான வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். இதனால் மீண்டும் மேம்பாலம் பார்க்கிங் ஏரியாவாக மாறி இருக்கிறது.

Leave a Comment