Memes: வருடா வருடம் மழையும் வந்து கொண்டிருக்கிறது சென்னையும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதுவும் டிசம்பர் மாதம் வந்தாலே ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொண்டு புயல் நம்மை ஒரு வழி செய்து விடுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் ஃபெஞ்சல் புயல் சென்னையை தண்ணீரில் மிதக்க விட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர்.
அதன் பிறகு வலு இழந்து விட்டது என கூறினார்கள். பிறகு தற்காலிக புயலாக வரும் என்று கணிக்கப்பட்டது. அதன் பிறகு நகராமல் ஒரே இடத்தில் இருக்கிறது என கூறி டென்ஷன் செய்தனர்.
இதனால் வருமா வராதா என்ன இப்படி இழுத்துகிட்டு இருக்கு என புயலை சென்னை வாசிகள் திட்டி தீர்த்தனர். அதை அடுத்து இன்று புயலாக மாறி கரையை கடக்கும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
இப்படி மூடு ஸ்விங்கில் நமக்கே டஃப் கொடுத்தது இந்த ஃபெஞ்சல் புயல். தற்போது சென்னையில் அதிக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் கரையை கடக்க தொடங்கியிருக்கிறது.
அடுத்த மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முழுவதுமாக கரையை கடந்து விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு இந்த புயல் அரபிக் கடலை நோக்கி நகரும்.
இருப்பினும் அதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு வார காலமாக நம்மை ஆட்டிப்படைத்த இந்த புயல் பற்றி நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.
பேர கேட்டா டம்மி பீசா இருக்க ஆனா பெரிய வேலையா பாத்துகிட்டு இருக்கியேடா என பங்கம் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் ஃபெஞ்சல் புயல் மீம்ஸ் தொகுப்பு இதோ.