வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

மகனை காப்பாற்ற பாண்டியன் விட்ட சவால்.. கதிர் மீது விழுந்த பழியிலிருந்து காப்பாற்றும் ராஜி, மலரப்போகும் காதல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு பலியாடாக சிக்குவது கதிர் தான். கதிர்மேல எந்த தப்பு இல்லை என்றாலும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் எல்லா தவறையும் தன் மீது தூக்கி போட்டு பாண்டியனிடம் திட்டும் அடியும் வாங்கி விடுவார்.

குடும்பத்திற்காக இப்படி பண்ணினார் என்று பார்த்தால் தற்போது பொது சேவையிலும் கதிர் இறங்கியதால் அவமானத்தையும் பழியையும் சுமக்கும் படி அமைந்துவிட்டது. அதாவது கார் டிரைவராக வேலைக்கு போன இடத்தில் ஒரு பெண் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார் என்பது கதிருக்கு தெரிந்து விட்டது.

அத்துடன் அந்தப் பெண்ணும், நான் தெரியாமல் இந்த பசங்க கூட வந்து விட்டேன். என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று கதிரிடம் உதவி கேட்டது. அதன் பிறகு தான் கதிர் நான் இருக்கும் வரை நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்களை பாதுகாப்பாக உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

அதனால் அந்தப் பெண்ணுடன் வந்த பசங்களை திசை திருப்பி அந்தப் பெண்ணை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் கதிர் வைத்திருப்பார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பெண்ணின் அப்பா, மகளை காணவில்லை என்று புகார் கொடுத்த நிலையில் கதிர் மீது சந்தேகப்பட்டு போலீஸ் பாண்டியன் குடும்பத்திற்கு சென்று கதிரை அரெஸ்ட் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். என் மகன் எந்த தவறும் செய்திருக்க மாட்டான் என்று கோமதி அழுது புலம்புகிறார்.

இதை பார்த்த ராஜியின் சித்தப்பா மற்றும் குமரவேலு வாய்விட்டு சிரித்து பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக பணம் காசு சம்பாதிக்க வேண்டும் என்று கடத்தல் பிசினஸ் செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார்கள் என்று அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் என் மகன் எந்த தவறும் பண்ணவில்லை என்று நிரூபித்து அவனை நான் வெளியே கூட்டிட்டு வருகிறேன் என்று சவால் விடுகிறார்.

அத்துடன் தற்போது கதிர் மீது விழுந்த பழி பொய்யானது என்று நிரூபிக்கும் விதமாக ராஜி உண்மையை கண்டுபிடிக்க போகிறார். அந்த வகையில் இந்த ஒரு இடைவெளியில்தான் கதிர்க்கும் ராஜிக்கும் காதல் மலர போகிறது.

- Advertisement -spot_img

Trending News