சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது 73 வயதில் கூட தொடர்ந்து அயராது .உழைத்து வருகிறார். 5 தலைமுறைகளை ஆண்டு, இன்றும் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இது தான் இவர் கடைசி படம் என்று சொன்னவர்கள் அனைவருக்கும்.. ‘எனக்கு அழிவே கிடையாது..’ என்று செயலால் நிரூபித்து காட்டினார். இந்த நிலையில், டிசம்பர் 12 அவரது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
அன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தளபதி படம் வெளியாகவுள்ளது. அதே நாளில் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்தால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்பது போல, வேற ஒரு முக்கிய அப்டேட் வர உள்ளது. தற்போது கூலி படத்தில் பிசியாக நடித்துவரும் சூப்பர்ஸ்டார் மீண்டும் நெல்சனுடன் கூட்டணி போட உள்ளார்.
இணையும் மாஸ் கூட்டணி
இந்த நிலையில், யாரும் எதிர்பாக்காத நேரத்தில் தளபதி படத்தின் கூட்டணி மீண்டும் இணைய போகிறது. இந்த தகவல் சில மாதங்களாகவே இணையத்தில் வட்டமிட்டு கொண்டு இருந்தாலும், அதற்க்கு வாய்ப்பு இல்லை என்று தான் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படி இருக்க திடீரென, மீண்டும் மணிரத்னம் சூப்பர்ஸ்டார் கூட்டணியில் ஒரு படம் வரப்போகிறது என்ற செய்திகள் உலா வருகிறது.
ஆனால் இந்த முறை உலா வரும் செய்திகளில் உண்மை உள்ளது போல தான் தெரிகிறது. ஏன் என்றால், மணிரத்னம் அடுத்து யாரை வைத்து படம் பண்ணபோகிறார் என்று எந்த தகவலும் வெளிவரவில்லை. தற்போது கமல்ஹாசனை வைத்து படம் பண்ணுகிறார் என்றால் நிச்சயம் இந்நேரம் தலைவர் இயக்குனர் மணிரத்னத்துக்கு போன் போட்டிருப்பார்.
அப்படி இல்லை என்றாலும் கூட, நிச்சயம் மணிரத்னம் இந்நேரம் சூப்பர்ஸ்டார் வைத்து ஒரு படம் பண்ணுவது என்று முடிவுக்கு வந்திருப்பார். அதனால் இவர்கள் கூட்டணி நிச்சயம் நடக்கும். தலைவர் 173-யாக மணிரத்னம் கூட்டணி அமையும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக மாறியுள்ளது.