Gossip: நடிகைகள் இயற்கை அழகோடு திறமையும் சேர்த்து நடித்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அழகும் கவர்ச்சியும் இருந்தால்தான் திரையுலகில் பிழைக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது.
அதன் பிறகு தான் திறமையை பார்க்கிறார்கள். ஆனால் திறமை இல்லாவிட்டாலும் கவர்ச்சியை வைத்து கரையேறும் நடிகைகளும் இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பத்தில் புசுபுசு என நடிக்க வந்த நடிகை இப்போது ஸ்லிம் பியூட்டியாக மாறி இருக்கிறார்.
தற்போது நம்பர் ஒன் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகை ஆரம்பத்தில் குண்டான உடல்வாகுடன் இருந்தார். அதன் பிறகு வாய்ப்புக்காக அவர் கன்னா பின்னா என டயட் இருந்து உடம்பை சிக்கென மாற்றினார்.
அழகை பாதுகாக்க சர்ஜரி செய்த நடிகை
அதன் பிறகு முகத்தில் சில திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என மூக்கு உதடு கண்ணம் என ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து பட்டி டிங்கரிங் செய்து இருக்கிறார். இதற்காக அம்மணி கோடிக்கணக்கில் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதன் விளைவாக பளிச்சென மாறிய நடிகை கொஞ்சம் கிளாமர் கலந்து வாய்ப்பை பிடிக்க ஆரம்பித்தார். இதனால் அவருடைய மவுசு கூடிய நிலையில் சம்பளத்தையும் ஹீரோக்களுக்கு நிகராக உயர்த்தினார்.
அதன் பிறகு உடம்பை இன்னும் ஒல்லியாக மெயிண்டெயின் செய்து வந்த அவரை கிழவி என்று கூட ரசிகர்கள் கிண்டல் அடித்தனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாத நடிகை இப்போது கொஞ்சம் பூசினார் போல் வெயிட் போட்டு நடிக்க தொடங்கி இருக்கிறார்.