செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

மன்னிச்சிடு தலைவா! விடாமுயற்சியால் திட்றாங்களா பாராட்டுறாங்களான்னு தெரியல?

அஜித்தின் படம் எப்படி இருந்தாலும் சரி, அவரை திரையில் காண்பதற்கே லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.

இப்படத்தில் அர்ஜூன், ரெஜினா, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித், இப்பட த்தை தயாரித்து வரும் லைகாவுடனான சில ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் கமிட்டானார்.

அதன் மீண்டும் தாடி இல்லாமல் இப்படத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் தற் போது அஜித் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி, விடாமுயற்சி படங்களும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் இரண்டில் எந்தப் படம் முதலில் ரிலீசாகும் என கேள்வி எழுந்தது.

டீசரு எல்லாம் ஓகேதான், அந்த பிஜிஎம் தான் ரசிகர்ஸ் டென்சன்?

இந்த நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி சன் டிவியில் யூடியூப் பக்கத்தில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கோலிவுட்டுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் இப்பட த்தின் ஒளிப்பதிவு, அஜித், அர்ஜீன், திரிஷா ஆகியோரின் நடிப்பும், ஹாலிவுட் தரத்தில் இதன் மேக்கிங்கும் இருந்தால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருந்தால் கூட தமிழுக்கு ஏற்றபடி, மகிழ்திருமேனி மாற்றியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால், கத்தி, மாஸ்டர், லியோ படங்களில் விஜய்க்கு மட்டும் மாஸ் பிஜிஎம், இசையைப் போட்டுக் கொடுத்த அனிருத், இப்படத்தில் சுமாராக பிஜிஎம் போட்டிருப்பதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அனிருத்திடம் கேட்டுவிட்டனர்.

மன்னித்துவிடு தலைவா

இந்த நிலையில் விடாமுயற்சி பட இசையை அனிருத் தன் வலைதள பக்கத்தில் பதிவிட, அதைக் கேட்டு ரசிகர்கள் மன்னித்துவிடு தலைவா என்று கூறி உண்மையில் நன்றாகத்தான் உள்ளது எனக் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்திற்கு தன் பின்னணி இசையை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் நாளுக்காக காத்திருப்பதாக அனிருத் கூறியிருந்தார். அது வரும் பொங்கலுக்கு ரிலிசாகும் இப்படம் ரிலீஸாகும் போது தியேட்டரில் நிச்சயம் நடக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். வேதாளம் படத்திலேயே அஜித்துக்கு இசையில் பின்னி பெடலெடுத்த அனிருத் இதில் சும்மா விடுவாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News