Dulquer Salmaan : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவில் அமரன், பிரதர், ப்ளடி பக்கர் போன்ற படங்கள் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது.
அதோடு வசூலையும் வாரி குவித்த நிலையில் எப்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் அமரன் படத்துடன் வெளியான மற்றொரு படம் தான் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர். இப்படத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தவுடன் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது.
மேலும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இவர்களுக்கு மகனாக நடித்த குழந்தை நட்சத்திரமும் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் துல்கர் சல்மானின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டும்படி லக்கி பாஸ்கர் படத்தில் அமைந்திருந்தது.
ஓடிடியில் வரவேற்பை பெறும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்
தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியானது. தியேட்டரை போல ஓடிடியிலும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமீபத்தில் நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இது நம்பர் ஒன் இடத்தில் இருந்த நிலையில் அதை ஓரம் கட்டும் அளவுக்கு இப்போது லக்கி பாஸ்கர் படம் அமைந்திருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருந்து வங்கி ஊழியர் ஆக வேலை பார்த்து கஷ்டப்படும் துல்கர் சல்மான் எவ்வாறு தனது வாழ்க்கையை சௌகரியமாக அமைத்துக் கொண்டார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ஏற்கனவே துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக இப்போது லக்கி பாஸ்கர் படமும் அமைந்திருக்கிறது. அதோடு இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.