New Serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியலுக்கு தான் மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு புது புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இருந்தாலும் சன் டிவி சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவி இருக்கிறது. ஆனால் விஜய் டிவி சீரியலுக்கு டப் கொடுக்கும் விதமாக ஜீ தமிழ் உள்ள சீரியல்கள் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.
அதனால் எப்படி சன் டிவியில் புது புது சீரியல்களை கொண்டு வருகிறார்களோ, அதே மாதிரி ஜீ தமிழ் சேனலும் புதுசாக சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம், அண்ணா, நெஞ்சத்தை கிள்ளாதே, கார்த்திகை தீபம், வீரா போன்ற சீரியல்கள் மக்களிடத்தில் அதிக வரவேற்பு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இன்னொரு புது சீரியல் வரப்போகிறது. இதில் கதாநாயகனாக இரண்டு முக்கியமான ஹீரோக்கள் கமிட் ஆகியிருக்கிறார்கள். அதிலும் இவர்கள் இரண்டு பேருமே சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள். அதில் ஒன்று ரோஜா சீரியலில் அர்ஜுன் கேரக்டரில் நடித்த சிப்பு சூரியன். இன்னொரு நடிகர் அன்பே வா சீரியலில் வருண் கதாபாத்திரத்தில் நடித்த விராத்.
இவர்கள் இருவருக்குமே மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது, அதனால் சீரியல் முடிந்த பிறகு புது சீரியலாக ஜி தமிழில் நடிக்க கமிட்டாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் சீரியலுக்கு கதாநாயகியாக சௌந்தர்யா ரெட்டி கமிட் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோயின்.
இவர்களைத் தொடர்ந்து வெள்ளி திரையில் ஹிட் படங்களை கொடுத்து சீரியலிலும் பிரபலமான நடிகை சாயாசிங் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி இந்த நான்கு பிரபலங்களும் நடிக்கும் ஒரே சீரியல் ஜீ தமிழில் கூடிய விரைவில் வரப்போகிறது.
அந்த வகையில் சன் டிவி மாதிரி புதுப்புது சீரியல்களை ஜீ தமிழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் டிவி இப்பொழுது வரை புது சீரியலுக்கு அஸ்திவாரம் போடாமல் பழைய மாவு அரைத்துக் கொண்டு வருகிறது. அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று துவண்டு போயிருக்கிறது.