தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சத்யஜோதி. இந்த நிறுவனம் கமலின் மூன்றாம்பிறை, மணிரத்னத்தின் பகல் நிலவு, கார்த்தியின் கிழக்கு வாசல் ஆகிய படங்களில் 80 காலக்கட்ட த்தில் தயாரித்து அதுவும், ஹிட் படங்களாகவே ரசிகர்களுக்குக் கொடுத்தது. கிட்டத்தட்ட அவர்கள் தயாரித்த படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா படங்கள் என்ற கூறப்படுகிறது.
அதன்பின், தனுஷின் தொடரி, அஜித்தின் விவேகம், விஸ்வாசம், வீரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிலையில் முன்னணி இயக்குனர்கள், நடிகர்களை வைத்து ஒரு படங்களை தயாரித்து வருகிறது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை குடும்பங்கள் பார்த்து மகிழும்படியான தரமான கதையுள்ள படங்களை கொடுத்து வந்தாக கூறப்படும் சத்யஜோதி பிலிஸ் 2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி முதல் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வரை மொத்தம் 11 படங்களை தயாரித்துள்ளது.
15 வருசத்துல வெறும் 1 படம் மட்டும்தான் ஹிட்டா?
அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தவிர மற்ற 10 படங்களும் ப்ளாப் தான் என கூறப்படுகிறது. அதாவது, முதலில், சினிமாவில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள தியாகராஜன், இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில், இப்போது அவரது மகன் அர்ஜூன் நிர்வாகத்தை பார்த்து வருகிறார்.
கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், அவர் தனது கருத்தை வலிய வலியுறுத்துவதால், பல இயக்குனர்கள் அங்கு கதை சொல்ல தயங்கி வருவதாகவும், இந்த நிறுவனத்தின் படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக அமைவதற்கு இதுதான் காரணம் என பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
நிர்வாகம் அடுத்த தலைமுறைக்கு கைமாறியதன் விளைவுதான் அந்த நிறுவனத்தின் தோல்வி படங்களாக வரிசையாக வெளியாகிறதா? ரன ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் விஷாலை வைத்து ஒரு படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியான நிலையில், இப்படமாவது ஜெயிக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.