Biggboss 8: இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷனில் 12 போட்டியாளர்கள் சிக்கி இருக்கின்றனர். வீட்டில் இருப்பவர்கள் பலதரப்பட்ட காரணங்களை சொல்லி இவர்களை நாமினேட் செய்துள்ளனர்.. அதில் யார் வெளியேறுவார்கள் என்ற சுவாரசியம் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.
இருப்பினும் தர்ஷிகா, சாச்சனா இருவரில் யாராவது ஒருவரை தூக்கி வெளியில் போடுங்கள் என ஆடியன்ஸ் கொதித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் டிசைன் டிசைனாக செய்யும் சேட்டை ஓவராகத்தான் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி யார் அதிக ஓட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். அதன்படி இந்த வாரம் மட்டுமல்ல எல்லா வாரமும் நாமினேஷனில் சிக்கினால் அதிக வாக்குகளை பெறுவது முத்துக்குமரன் தான்.
நாமினேஷனில் சிக்கிய 12 பேர்
அதன்படி இந்த வாரமும் அவர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள சௌந்தர்யா 29 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்தடுத்த நிலையில் ராணவ், ஜாக்லின், சத்யா, ரயான், பவித்ரா, ரஞ்சித், மஞ்சரி, தர்ஷிகா, சாச்சனா, ஆனந்தி ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஆனந்திக்கு தற்போது வரை 4200 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.
போகப் போக இது அதிகரிக்குமா அல்லது குறையுமா? என்பது தெரிந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி சாச்சனா இந்த வாரமும் வெளியேறப் போவதில்லை. பிக் பாஸ் வீட்டில் சகுனி வேலை பார்த்து வரும் ஆனந்தி வெளியேறினாலும் பார்வையாளர்களுக்கு சந்தோஷம்தான்.