Biggboss 8: இந்த சீசன் பிக்பாஸ் ஆரம்ப கட்டத்தில் அழுகாச்சி டிராமாவாக இருந்தது. போகப் போக சண்டை, சாப்பாட்டுப் பிரச்சினை என டிராக் மாறியது. இதில் விளையாட்டுக்காக சண்டை போட்ட சம்பவம் எல்லாம் அரிதுதான்.
எப்ப பார்த்தாலும் சாப்பாட்டுக்கு சண்டை போட்டு பார்ப்பவர்களை கடுப்பேற்றி வருகிறது இந்த சீசன். இதை பார்க்கும் பிக்பாஸ் கூட அட சோத்துக்கு செத்தவிங்களா விளையாட சொன்னா என்னடா பண்றீங்க என மைண்ட் வாய்ஸில் கழுவி ஊற்றுவார்.
அந்த அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் சாப்பாடு தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதில் சாச்சனாவுக்கு நிச்சயம் முக்கிய பங்கு இருக்கும். ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோவில் ஜாக்லின் மஞ்சரியை காய்ச்சி எடுக்கிறார்.
கடந்த வாரம் நடந்த சம்பவம் தான் இதற்கு காரணம் என்பதை யோசிக்க தேவையில்லை. அதன்படி மஞ்சரியிடம் அவர் எனக்கு சாம்பார் பிடிக்காது அப்படின்னா பருப்பு, பால் தனியா தருவீங்களா, நான் பாயாசம் செஞ்சு சாப்பிட்டுக்கலாமா என கேட்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சாப்பாடு சண்டை
உடனே மஞ்சரி தன்னுடைய பிராண்ட் வார்த்தையான mock என சொல்கிறார். உடனே ஜாக்லின் இந்த வீட்ல எல்லாரும் உங்கள கிண்டல் பண்றதுக்காக தான் இங்க வந்திருக்கோமா என சரியான பாயிண்ட்டை பிடித்தார்.
அதை அடுத்து களத்தில் இறங்கிய சவுண்டு சரோஜா சண்டைக்கு பாய்ந்தார். நாங்க எங்களுக்குள்ள பேசிப்போம் நீ எதுக்கு குறுக்க வர என ஆத்தா மலையேறிய ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல் கடந்த வாரம் மஞ்சரிக்கு ஆதரவு கொடுத்த ஆடியன்ஸ் கூட இந்த வாரம் அவரை திட்டுகின்றனர். செவ்வாய்க்கிழமை வந்தாலே இவருக்கு ஏதாவது ஒரு சண்டை இழுப்பது வேலையாக போய்விட்டது.
தேவையில்லாமல் ஒரே ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு பிரச்சனை செய்கிறார் என அவருக்கு எதிரான கமெண்ட்டுகள் தான் இப்போது பரவி வருகிறது. இந்த சண்டை எந்த அளவுக்கு வெடிக்கும் என இன்றைய எபிசோடில் பார்ப்போம்.