சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தது ரோகிணி, மீனாவிடம் உண்மையை சொன்ன பார்வதி.. முத்துக்கு வரும் சந்தேகம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவுக்கு முதல் ஆடர் கிடைத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் பிரியாணி சமைத்து சந்தோஷத்தை கொண்டாடிவிட்டார். இதனை தொடர்ந்து முத்து மற்றும் மீனா கோவிலுக்கு சென்று பூஜை பண்ணுகிறார்கள். அந்த நேரத்தில் பரிகாரத்தை செய்வதற்காக விஜயா, மனோஜ் மற்றும் ரோகினி வந்திருக்கிறார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரி விஜயா கையில் பூச்செட்டியை வைத்திருக்கிறார். அதே மாதிரி மனோஜும் வேப்பிலை கட்டிக்கொண்டு கையில் பூச்செட்டி கொண்டு பிரகாரத்தை சுத்த ஆரம்பித்து விட்டார்கள். முத்து இவர்களை பார்த்த நிலையில் அதை வீடியோ எடுத்து வீட்டிற்கு கொண்டுட்டு வந்து விடுகிறார். இதை வீட்டில் இருப்பவர்களுக்கு போட்டு காமிக்கலாம் என்று மீனாவிடம் சொல்கிறார்.

ஆனால் மீனா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தேவையில்லாத பிரச்சினை பண்ண வேண்டாம் என்று சொல்கிறார். எதையும் காது கொடுத்து கேட்காமல் முத்து, வீட்டிற்கு வந்ததும் அனைவரையும் ஹாலில் உட்கார வைத்துவிட்டு டிவியை ஆன் பண்ணி எடுத்த வீடியோவை போட்டு விடுகிறார். அதில் விஜயா மற்றும் மனோஜ் செய்யும் விஷயங்களை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டு நக்கல் அடிக்கிறார்கள்.

பிறகு மனோஜ், கடை முன்னாடி மூணு முட்டை வைத்து செய்வினை வைத்திருக்கிறார்கள். அதற்கு பரிகாரம் செய்யவில்லை என்றால் அம்மா உயிருக்கு ஆபத்தாகிவிடும். அத்துடன் என்னுடைய பிசினஸும் நஷ்டப்பட்டு நான் நடுத்தெருவுக்கு போய் விடுவேன் என்று ஜோசியக்காரர் சொன்னார். இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் பரிகாரம் பண்ண வேண்டும் என்று சொன்னதால் நானும் அம்மாவும் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்தோம் என மனோஜ் சொல்கிறார்.

சாமி பூஜை பண்ணுவதெல்லாம் நம்மளுடைய நம்பிக்கை. ஆனால் அதற்காக செய்வினை சூனியம் எல்லாத்தையும் நம்பிக்கொண்டு இருந்தால் நம் வாழ்க்கை வீணாகிவிடும் என்று அண்ணாமலை புத்திமதி சொல்கிறார். ஆனால் விஜயா, நான் கூட முதலில் நம்பல ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி ஃபேன் கீழே விழுந்தது, எனக்கு கரண்ட் ஷாக் அடித்தது எல்லாத்தையும் வைத்து பார்க்கும் பொழுது அது உண்மை என்று நினைத்து தான் பரிகாரத்தை பண்ணினேன் என்று சொல்கிறார்.

ஆனாலும் இவர்கள் காமெடி பீஸ் ஆக இருந்ததால் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் மனோஜின் ஷோரூம் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வருகிறார். வந்ததும் ஷோரூம் சாவியை கேட்கிறார். பின்பு கடை வாசலில் வைக்கப்பட்ட முட்டை சூனியமுட்டை இல்லை. பக்கத்தில் இருக்கும் ஏடிஎம் மிஷினில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் ஒரு முதியவரின் பேரன் பண்ணின விஷயம்.

மழைக்கு நம் கடை முன்னாடி ஒதுங்கி இருக்கிறார்கள். அப்பொழுது அந்த செக்யூரிட்டியின் பேரன் அந்த முட்டையில் ஏதோ எழுதிட்டு மறந்து போய் வச்சுட்டு போயிட்டதாகவும், இன்று வந்து அதை கேட்டதாகவும் அந்த ஊழியர் குடும்பத்தில் இருப்பவர்கள் முன் மனோஜிடம் சொல்கிறார். இதை கேட்டதும் ஒட்டு மொத்த பேரும் சிரித்துக்கொண்டு மனோஜை ஒரு காமெடி பீஸ் ஆக நினைத்து விட்டார்கள்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் ரோகிணி, விஜயா மற்றும் மனோஜ் திருட்டு முழி முழித்துக் கொண்டு ரூம்குள் போய்விடுகிறார்கள். அடுத்ததாக மீனா, விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போகிறார். போன இடத்தில் உன்னை மாதிரி ரோகினியும் விஜயாவுக்கு ஒரு நல்ல மருமகளாக இருக்கிறார் என்று சொல்லி வீட்டில் காணாமல் போன பணத்திற்கு ரோகிணி தான் அவளுடைய பணத்தை கொடுத்து பிரச்சினையை சரி செய்தார் என்ற உண்மையை பார்வதி சொல்லிவிடுகிறார்.

இதை கேட்டதும் மீனாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லி எதற்காக ரோகினி பணத்தை கொடுக்க வேண்டும். ரோகிணி அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்ன விஷயம் என்று முத்துக்கு சந்தேகம் வந்ததன்படி திருட்டு போன பணத்தை உண்மையில் யார் எடுத்தார் என்ற விஷயத்தை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப் போகிறார். அந்த வகையில் நிச்சயம் இந்த விஷயத்தில் ரோகினி கையும் களவுமாக மாட்டப் போகிறார்.

Trending News