Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை அட்மிட் பண்ணி இருக்கும் ஹாஸ்பிடலில் பாக்யாவை மனைவி என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் ராதிகா மொத்தமாக உடைந்து போய்விட்டார். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ பாக்யாவின் கணவரான கோபியை ராதிகா கல்யாணம் பண்ணும் போது பாக்கியாவின் மனசு எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கும்.
கர்மா எப்பொழுதுமே பதிலடி கொடுக்கும் என்பதற்கு ஏற்ப ராதிகா தற்போது யாரும் இல்லாமல் தனியாக இருப்பது போல் பீல் பண்ணுகிறார். அத்துடன் கோபியை காப்பாற்றிய பாக்யா ஹாஸ்பிடலில் இரவு முழுவதும் இருந்து பார்த்துக் கொள்கிறார். அங்கே வந்த செல்வி உன்னுடைய மனிதாபிமானம் எல்லாம் முடிந்து போய்விட்டது வா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார்.
அதற்கு பாக்கியா அவர் கண் முழித்தும் நான் வருகிறேன் நீ போ என்று அனுப்பி வைக்கிறார். பிறகு கோபி ஆபரேஷன் எல்லாம் முடித்து ரூமுக்கு மாற்றியதும் பார்க்க போகலாம் என்று நர்ஸ் சொல்கிறார்கள். உடனே ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் அனைவரும் கோபியை பார்த்து பேசுகிறார்கள். ஆனால் கோபி பழைய மாதிரி பேச முடியாததால் பார்த்துவிட்டு மட்டும் வெளியே வந்து விடுகிறார்கள்.
இதற்கிடையில் ஈஸ்வரி, கோபியை பார்க்க விடாமல் ராதிகாவை தடுத்து நிறுத்தியதால் ராதிகா மழையில் நனைந்து கொண்டு பீல் பண்ணி வீட்டிற்கு போகிறார். அத்துடன் பாக்யாவை மனைவி என்ற சொன்ன விஷயத்திற்கும் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்த்து தன்னை தனியாக நிற்க விட்டு விட்டார்கள் என்பதாலும் ராதிகா அழுது கொண்டே வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் மொத்தமாக நிலை குலைந்து போன ராதிகா கீழே உட்கார்ந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார்.
ராதிகாவின் நிலைமையை பார்த்ததும் மயூ ரொம்பவே பயப்பட ஆரம்பித்து விட்டார். உடனே அப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்கும் பொழுது ராதிகா அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறார், சரியானதும் வீட்டுக்கு வந்து விடுவார் என்று மயூவை சமாதானப்படுத்தி ரூம்குள் போக வைக்கிறார். பிறகு ராதிகா அவருடைய அம்மாவிடம் கோபி ஹாஸ்பிடல் இருக்கிறார்.
ஆனால் என்னை பார்க்க விடாமல் வெளியே துரத்தி விட்டார்கள் என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். ஆனாலும் ராதிகாவின் அம்மா நீதான் கோபியின் மனைவி அந்த உரிமையை விட்டுக் கொடுக்காத. நானும் உன் கூட வாரேன் வா போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு ராதிகா அழுது கொண்டே இருக்கிறார். பிறகு ஹாஸ்பிடல் வரும் ராதிகாவை ஈஸ்வரி தடுத்து நிறுத்தி என் மகனை பார்க்க கூடாது என்று அராஜகம் பண்ணும் அளவிற்கு அரக்கி போல் நடந்து கொள்கிறார்.
ராதிகாவை பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப நிலை குலைந்து போய் நிற்கிறார். ராதிகாவிற்கு சப்போர்ட்டாக பாக்யா பேசினாலும் ஈஸ்வரி காது கொடுத்து கேட்காமல் ராதிகாவை புண்படுத்தி பேசுகிறார். இதனால் நிலைகுலைந்து போன ராதிகாவை சமரசம் செய்யும் விதமாக பாக்கிய தனியாக கூப்பிட்டு ஆறுதல் படுத்துகிறார். தனக்கு யாருமே இல்லை தனியாகி விட்டேன் என்பதற்கு ஏற்ப ராதிகாவும் பாக்கியாவிடம் பீல் பண்ணி பேசுகிறார்.