விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படம் சீனாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அங்கே குடும்பங்களாக வந்து மக்கள் இதை கொண்டாடி வருகின்றனர். வெறும் 20 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் 109 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது.
இப்பொழுது இந்த படத்தை சீன மொழியில் மொழிபெயர்த்து அங்கே ரிலீஸ் செய்துள்ளனர். மொத்தமாய் மூன்று நாட்களில் மகாராஜா படம் அங்கே ஒரு மில்லியன் வசூலித்துள்ளது. அதாவது இந்திய நாட்டின் மதிப்பு படி இந்த படம் அங்கே திரையிடப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாய் 10 கோடிகள் வசூல் சாதனை செய்துள்ளது.
சீனாவில் இதற்கு முன்னரும் அங்கே தமிழ் படங்கள் ரிலீஸ் செய்துள்ளனர் அப்படி மகாராஜாக்கு முன்பே இரண்டு படங்கள் நல்ல வசூல் செய்துள்ளது. சீனாவில் வாரத்துக்கு மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகுமாம். அந்த மூன்று படங்களில் இந்த முறை விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் ஒன்று.
இதற்கு முன்னர் சீனாவில் தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்று தந்த படம் என்றால் சங்கர் இயக்கிய 2.0, ரஜினிக்கு அங்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இதனால் இந்த படமும் சீனாவில் திரையிடப்பட்டது. 12 கோடிகள் வரை 2.0 படம் அங்கே வசூல் சாதனை செய்தது.
ரஜினியின் 2.0 படத்திற்கு முன்பே அங்கே இந்திய படம் ஒன்று அதிக வசூலை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அமீர் கான் நடிப்பில் உருவான தங்கல் படம் தான் 14 கோடிகள் வசூலித்து நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.