Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவை பார்த்ததும் விஜய்க்கு பழைய காதல் மலர்ந்து விட்டது. என்னதான் தற்போது காவிரியை மனசார ஏற்றுக்கொண்டு மொத்த காதலையும் கொட்டி கணவராக மாறி இருந்தாலும் பழைய நினைவுகள் எப்போதுமே அழிக்க முடியாது என்பதற்கேற்ப வெண்ணிலாவின் நிலைமையை பார்த்து விஜய் பரிதாப பட ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் வெண்ணிலாவின் நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் வெண்ணிலா மீது அக்கறை காட்டி பழையபடி கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான முயற்சி தான் வெண்ணிலாவுடன் பேசிக்கொண்டு ட்ரீட்மென்ட் எடுத்து சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
ஆனால் சந்தர்ப்பம் நேரமும் ஒருவரை எப்படி வேணாலும் மாற்றும் என்பதற்கு ஏற்ப காவிரி பார்க்கும் பொழுது விஜய், வெண்ணிலாவுடன் இருப்பதை தவறாக புரிந்து கொள்கிறார். அத்துடன் அக்கரையாக பேசும் விதம் கூட காவேரிக்கு தவறாக புரிகிறது. அதனாலையே காவிரி மனதிற்குள் அழுது புலம்பி தவிக்கிறார். இதை பார்த்த ராகினி கைகட்டி வேடிக்கை பார்த்து சிரிக்கும் அளவிற்கு சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
பிறகு நடந்த விஷயத்தை கங்கா மூலம் காவேரி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுகிறது. இதனால் குமரன் மற்றும் காவிரியின் பாட்டி, விஜய் வீட்டிற்கு போய் பார்க்கிறார்கள். அங்கே விஜய் வெண்ணிலாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தாத்தாவை தனியாக வரச் சொல்லி காவேரி நிலைமைக்கு நியாயம் கேட்கிறார்கள். அதற்கு தாத்தா நீங்கள் நினைக்கும் மாதிரி எந்த தப்பும் நடந்து விடாது.
நான் விஜய் இடம் பேசி புரிய வைக்கிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக குமரன், நவீனை பார்ப்பதற்கு வீட்டிற்கு போகிறார். அங்கே காவேரி செஞ்ச விஷயத்தை சொல்லும் பொழுது யமுனாவும் கேட்டு விடுகிறார். அந்த வகையில் காவிரி அவருடைய தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட விஷயமாக கங்கா மற்றும் யமுனா காவிரியை திட்டி விடுகிறார்கள்.
மேலும் தற்போது காவிரி நிலைமை என்ன என்பது நவீனுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் நவீனின் காதலை அலட்சியம் செய்த காவேரி மற்றும் விஜய்க்கு தற்போது ஒரு பதிலடியாக தான் வெண்ணிலாவின் என்டரி இருக்கிறது. இருந்தாலும் விஜயை பொறுத்தவரை வெண்ணிலா மீது காட்டுவது அன்பு அக்கறை. ஆனால் காவேரியிடம் இருப்பது காதல், அதனால் தான் காவிரியை பொக்கிஷமாக நினைக்கிறார்.