ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டெய்லி 50,000 குடுங்க.. அப்போ தான் நடிப்பேன்.. தயாரிப்பாளரை அலறவிட்ட பாபி சிம்ஹா

ஹீரோ வில்லன் குணச்சித்திர நடிகர் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, கதை நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடிக்கும் ஒரு நடிகராக தான் நாம் அனைவருக்கும் பாபி சிம்ஹாவை பற்றி தெரியும். அவர் தேர்வு செய்யும் படங்களும் பொதுவாக நல்ல கன்டென்ட் படமாக தான் இருக்கும்.

இந்த நிலையில், இவர் செய்த ஒரு வேலை கூட தயாரிப்பாளருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாம். சமீப காலமாக ஒன்னு ரெண்டு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கூட ஷூட்டிங்-க்கு பெரும் பரிவாரத்தோடு வருவது வாடிக்கையாக மாறியுள்ளது.

தன்னுடன் 10 பேரை அழைத்துக்கொண்டு வந்து அவர்களுக்கும் டிப்ஸ் கொடுங்க என்று சொன்னது போக, அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்கிறார்கள்.

உதாரணத்துக்கு நடிகை நயன்தாரா, தனது குழந்தைகளின் ஆயாக்களையும் ஷூட்டிங்க்கு அழைத்து வந்து அக்கப்போர் செய்கிறார் என்பது பல தயாரிப்பாளர்களின் புலம்பலாக இருந்தது.

இவர் மட்டுமின்றி, பெரும்பாலான நடிகர் நடிகைகள் தனது assitant என்று கூறி நான்கு பேரை அழைத்து வந்து அவர்களுக்கும் சேர்த்து சார்ஜ் செய்கிறார்கள்.

இது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதே போல ஒரு வேலையை தான் சமீபத்தில் பாபி சிம்ஹாவும் செய்திருக்கிறார். அவர் தன்னுடன் ஒரு அசிஸ்டன்ட்டை அழைத்து வந்து, அவருக்கும் ஒரு நாள் பேட்டாவாக 50,000 ரூபாய் வழங்க சொல்லி இருக்கிறார்.

இதை கேட்டு தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டார். இருப்பினும், அதெல்லாம் முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தற்போது அவர் தமிழில் தடை உடை மற்றும் தெலுங்கில் சளார் பார்ட் 2 வில் தான் நடித்து வருகிறார். எந்த படத்தில் இந்த வேலையை பார்த்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News