ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அஜித்தை சந்திக்கும் விஜய்.. என்ன நடக்க போகுதோ.? பிரபலம் பகிர்ந்த தகவல்

தவெக கட்சியின் தலைவர் விஜய் தன் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார். இதற்காக, மாவட்டம் தோறும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

2026 தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது விஜய்யின் கனவு. அதற்காகத்தான் முதல் மாநாட்டை நடத்தினார். கொள்கைகளையும் வெளியிட்டார். அதை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னும் சில மாநாடுகள் நடத்தவுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை பற்றி திமுக, விசிக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. எனவே விஜய்க்கு அரசியலில் சுற்றிலும் எதிர்ப்புகள் குவிந்துள்ளன. விஜய் பல ஆண்டுகள் அனுபவமுள்ள கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்து பேசுகிறார். அதனால் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அவரை எதிர்க்கின்றன. இது தொடர்ந்தால் தவெகவுக்கு பின்னடைவு ஏற்படும். வாக்கு சதவீதம் பாதிக்கும் என விஜய் யோசித்திருப்பார் என தெரிகிறது.

அஜித்தை சந்தித்து ஆதரவு கேட்கும் தவெக தலைவர் விஜய்!

அதனால் சக நடிகரும் நண்பருமான அஜித்தை சந்தித்து தவெகவுக்கு விஜய் ஆதரவு கேட்கவுள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்க்கு சினிமாவிலேயே பல எதிர்ப்புகள் இருந்தன. அவரது படங்கள் ரிலீசின் போது பிரச்சனைகள் ஏற்பட்டன. இதையெல்லாம் யோசித்து தான் மாஸ் ரசிகர்களை வைத்துள்ள அஜித்திடம் ஆதரவு கேட்கவுள்ளார். தவெகவின் ஓட்டு வங்கியை அதிகரிக்க அவரது ரசிகர்களின் வாக்குகளை பெறவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.

சினிமாவின் தன்னுடன் வளர்ந்த சக நடிகர் விஜய். அவர் துணிந்து அரசியலுக்கு வந்துள்ளார். அதனால் விஜய்க்கு அஜித் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளிப்பார் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் தான் அரசியலுக்கு வரவில்லை. விஜய்யாவது வந்திருக்கிறாரே. அப்படி என நினைத்து அஜித் ரசிகர்கள் 30 சதவீதம் பேர் விஜயின் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News