சூர்யா கேரியரில் அதிகமான விமர்சனத்தையும் ட்ரோல்களையும் சந்தித்த ஒரு படமென்றால் அது கங்குவா படம் தான். அந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சூர்யா.
ஆனால் படத்துக்கு ப்ரோமோஷன் என்ற பெயரில் ஓவர் பில்ட் அப் கொடுத்து படத்தில், தேவை இல்லாமல் ஒரு சில cringe-களை செய்து சிதைத்துவிட்டார் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
கங்குவா படத்துக்கு மோசமான விமர்சனம் வந்திருந்தாலும், படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு அசுரத்தனமாக இருந்தது. இந்த படத்தின் தோல்வி, நடிகர் சூர்யாவை பெருமளவில் பாதித்து இருந்தது.
மேலும் இந்த படத்தின் தோல்வியால் ஹிந்தியில் அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் கர்ணன் படத்திலும் இவரை நடிக்க வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு இனி ஏறுமுகம் மட்டும் தான்..
சூர்யாவுக்கு இந்த படம் ஏற்படுத்தி கொடுத்த தோல்வியால் அவர் மீள முடியாது என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் நடிகர் சூர்யா.
அப்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து, படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மேலும் இதை தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
அதற்க்கு அடுத்தது ஸூர்ய 6 படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்தது. தற்போது அதை confirm செய்துவிட்டனர்.
சூர்யா 46 படத்தை வெற்றிமாறன் தான் இயக்கப்போகிறார். வாடிவாசல் படம் தான் அது. அந்த படத்தில் சூர்யா நடிப்பதில் எந்த குழப்பமும் இல்லை. அதனால் சூர்யாவுக்கு இனி ஏறுமுகம் மட்டும் தான்.