சூர்யா- பாலா – விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பு? திரை நட்சத்திரங்கள் வியப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா படத்தை பாலா இயக்கியபோது, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில் இருந்து விக்ரம் – பாலா இருவரும் பேசிக் கொள்வதில்லை.

அடுத்து, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை பாலா இயக்கி வந்தார். இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதனால், பாலாவின் கேரியர் பாதிக்குமோ என தகவல் வெளியானது.

வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து நிறைவு செய்துள்ளார் பாலா. இதன் ஃபர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மனக்கசப்பை மறந்து மூவரும் இணைவர்களா?

பாலா சினிமாவில் இயக்குனராகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாட திரைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பாலா -25 விழாவில், விக்ரம், சூர்யா இருவரும் பங்கேற்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.

இருவரின் கேரியரிலும் ஆரம்பத்தில் ஹிட் படம் கொடுத்து தூக்கிவிட்டவர் பாலா. கருத்துவேறுபாட்டை மறந்து, சூர்யா, விக்ரம் இருவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

மூவரும் படத்தில் தான் மீண்டும் இணைய வாய்ப்பில்லை. இவ்விழாவில் ஆவது இணைவார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் மூவரும் ஒன்றாக பங்கேற்றால் சினிமாத்துறையினர் வியப்பது உண்மைதான்.

Leave a Comment