Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரமே சூடு பிடித்து விட்டது. வீடு ஆண்கள் பெண்கள் என தனித்து இல்லாமல் ஒன்றாக மாறிய நிலையில் அடுத்தடுத்த அலப்பறைகள் அரங்கேறி வருகிறது.
இதில் கோவா கேங் என்ற பெயரில் ஜாக்லின் சௌந்தர்யா செய்யும் அட்டகாசம் அதிகமாகவே இருக்கிறது.. அதேபோல் அவர்களை சீண்டி பார்க்கும் மஞ்சரியும் ஒரு புறம் கவனம் ஈர்க்கிறார்.
நேற்று இந்த மூவருக்குள்ளும் ஒரு பஞ்சாயத்து நடந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீடு சொர்க்கம் நரகமாக மாறி இருக்கிறது. அதில் சாத்தான்கள் ஒரு பக்கம் தேவதைகள் ஒரு பக்கம் என போட்டியாளர்கள் பிரிந்துள்ளனர்.
இந்த டாஸ்க் படி சாத்தான்கள் தேவதைகளை வெறுப்பேற்ற வேண்டும். ஆனால் இப்போது இரண்டு சாத்தான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் முற்றிய சண்டை
ராகவா லாரன்ஸ் சொல்வது போல் பேய்க்கும் பேய்க்கும் என்ற சண்டை கதையாக தற்போது ப்ரோமோ வந்துள்ளது. அதில் ஜாக்லின் தர்ஷிகா இருவரும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கின்றனர்.
இருவரும் வரம்பு இல்லாமல் பேசும் நிலையில் தர்ஷிகா இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது என வார்த்தையை விடுகிறார். உடனே சவுண்டு சரோஜா தோழிக்கு ஆதரவாக அது எப்படி நீ சொல்லலாம் என சண்டை கட்டுகிறார்.
இதனால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக மாறி இருக்கிறது. மற்ற போட்டியாளர்கள் இவர்களின் சண்டையை விலக்கிவிட தான் பார்க்கின்றனர். ஆனாலும் வீடு ரணகளம் ஆகிவிட்டது. இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.