சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அசிங்கமா இல்லையா? பவித்ராவை கேவலமாக நடத்தும் பிக்பாஸ்.. இதெல்லாம் ஒரு டாஸ்க்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நேற்றைய தினம் யாரெல்லாம் நல்லவர்களை போல நடிக்கிறார்கள், பாசத்தை பொழிபவர்களாக காட்டிக்கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதில் ரஞ்சித், பவித்ரா, அன்ஷிதா, jeffry, சத்யா ஏஞ்சல்களாகவும், தீபக், தர்ஷிகா, ஜாக்குலின், மஞ்சரி போன்றவர்கள் தேவிலாகவும் இருக்கின்றனர்.

இந்த டாஸ்கில் டெவில்கள், ஏஞ்சல்களை கோவப்படுத்தவோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ, அழ வைக்கவோ செய்ய வேண்டும். அப்படி டெவில்கள் செய்யும் டார்ச்சலில் உடைந்துவிட்டால், அவர்களுக்கு பாயிண்ட் குறையும். அவர்களது ஹார்ட்களை இழப்பார்கள்.. மேலும் இந்த மனஉளைச்சலை கொடுத்த டெவில்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்கள்.

அசிங்கமா இல்லையா?

இந்த முறை வந்திருக்கும் போட்டியாளர்கள், யாரும் உண்மையாக இல்லாமல் கேம் மட்டும் தான் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி இந்த டாஸ்க் வந்ததிலிருந்து, மஞ்சரி சௌந்தர்யா போன்றவர்கள் செய்வது, முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக மஞ்சரியை ஆரம்பத்திலிருந்தே, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை, ஆடியன்ஸுக்கும் பிடிக்கவில்லை.

மஞ்சரி அசிங்கமாக கேம் play பண்ணுகிறார் என்பது பொதுவான கருத்தாகவும் உள்ளது. அந்த வகையில் ஹார்ட்களை பெறுவதற்காக மஞ்சரி, பவித்ராவை மோசமாக நடத்துகிறார்.

அவர் முகத்தில் முட்டையை உடைத்து பூசுகிறார். மேலும் முட்டையை உடைத்து அவர் வாயில் ஊற்றுகிறார். பவித்ரா ஒருகட்டத்தில், சகிப்பு தன்மையை இழந்து அழ ஆரம்பிக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் மற்றொரு டெவிலான தர்ஷிகா.. வெட்கமா இல்லையா.. அசிங்கமா இல்ல.. இவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்.. ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறாய்? என்று வசைபாடுகிறார்.

அப்போதுதான் அவர் கண் கலங்கி அழ ஆரம்பிக்கிறார்.. ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இதெல்லாம் ஒரு டாஸ்க் ஆ என்று ரசிகர்கள் வசைபாடி வருகிறார்கள்.

Trending News