ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கீர்த்தி சுரேஷிக்கு ஒரே நாளில் ரெண்டு முறை கல்யாணம்.. எதனால் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். அன்றே அவர் தன் காதலர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். அதில், 15 ஆண்டு கால பழக்கம் என்று பதிவிட்டிருந்தார்.

சினிமாவில் நடித்து தேசிய விருது முதற்கொண்டு பல விருதுகள் வாங்கியவர். எப்போது கல்யாணம் என்று பலரும் கேட்டு வந்தனர். அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக கீர்த்தி சுரேஷின் பதிவு இருந்தது. தன் மீதான கிசுகிசுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஒரே நாளில் ஏன் ரெண்டு முறை திருமணம்!

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். இருவரும் இருவேறு மதங்களாக உள்ளனர். ஆனால் அது காதலுக்கு தடையாக இல்லை. வரும் 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளது.

இதில் விஷேசம் என்றவென்றால், டிசம்பர் 12 ஆம் தேதி காலையில் இந்து முறைப்படி கல்யாணம். அன்றைய தினம் மாலையே சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம்.

இருவீட்டாரின் விருப்பப்படியே இவர்களின் கல்யாணம் இரண்டு மதப்படியும் கல்யாணம் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பா? இல்லை சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்பார்களா என தெரியவில்லை.

தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை கீர்த்தி சுரேஷிக்கும் நண்பர்கள் அதிகம். அதனால், விஜய் உள்ளிட்ட நடிகர்களும் அதில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

Trending News