ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நாக சைதன்யா திருமணம் நடக்கும் இன்று சமந்தா போட்ட போஸ்ட்.. பாவம்பா அவங்க

இன்று நாகசைதன்யா சோபிதா திருமணம் நடந்து வருகிறது. இதை லைவ் ஆக ஒளிபரப்பி வருகின்றனர். இன்று காலை முதல் சம்பிரதாய முறை படி, இவர்கள் செய்யும் திருமணத்தை பார்த்து ஏராளமானோர் வாழ்த்தி வருகின்றனர். அதே சமயம் சமந்தா என்ன செய்கிறார், அவர் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை தான் ரசிகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

நாகசைதன்யா சமந்தா திருமணம், ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. மேலும் இவர்கள் காதலை வியப்போடு பார்த்து வந்தார்கள். இவர்களுக்கு விவாகரத்து என்று அறிவிக்கும்போது, ரசிகர்களால் அதை நம்பவே முடியவில்லை. முக்கியமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரணம், இவர்களுக்குள் பிரச்சனையை உள்ளது என்பதே, இவர்களை விவாகரத்தை அறிவித்த போது தான் தெரியும்.

இன்று சமந்தா போட்ட போஸ்ட்

மேலும் இவர்கள் விவாகரத்தை தொடர்ந்து சமந்தா அளிக்கும் சில பேட்டிகளில் அவர் கண் கலங்கி அழுது விடுவார். முக்கியமாக, நாகசைதன்யா சமந்தா இணைந்து நடித்த பாடல் கேட்டபோது கூட, அவர் கலங்கியதை பார்த்திருப்போம். இந்த விவாகரத்தால் சமந்தா உடைந்து போனாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

அப்போது, மையோசிட்டிஸ் எனும் நோய் பேரிடியாக வந்து விழுந்தது. அதையும் பொருட்படுத்தாமல், அடுத்த லெவெலுக்கு சென்று கொண்டிருந்தார் சமந்தா. இந்த நிலையில், சமீபத்தில் நாக சைதன்யா சோபிதா திருமண அறிவிப்பு வந்தது.

அப்போது சமந்தா ஏதாவது ரியாக்ட் செய்வாரா என்று பார்த்த போது. அதற்க்கு எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. பேட்டிகளிலும் அவர்களை பற்றி எந்த கேள்வியும் தன்னிடம் கேட்க கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக கூறிவிட்டார்.

இந்த நிலையில், இன்று அவர்களின் திருமணம் நடக்கும் வேலையில், சமந்தா ஒரு ஸ்டோரி போட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் ஒரு சிறுவனும் சிறுமியும் சண்டை போடுகிறார்கள். அந்த பெண் குழந்தை தொடர்ந்து சண்டை போட்டு tough கொடுக்கிறது. இதன் கீழ் #fightlikeagirl எனும் ஹாஷ்டாக் போட்டுள்ளார்.

ஒரு பெண் போல எப்போதும் சண்டை போடு என்று அவர் கூறியது, “ஒருவேளை இவர் தனக்கு தானே motivate செய்துகொள்கிறாரா ” என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறார். இதை பார்த்து பாவம் பா சம்மு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News