பிக் பாஸ் வீட்டில் இப்போது தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. இருப்பினும் மஞ்சரி செய்வது, மிகவும் irritating ஆக உள்ளது. நிச்சயம் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளது. தற்போது, ஒரு டாஸ்க் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த டாஸ்கில் டெவில்கள், ஏஞ்சல்களை கோவப்படுத்தவோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ, அழ வைக்கவோ செய்ய வேண்டும். அப்படி டெவில்கள் செய்யும் டார்ச்சலில் உடைந்துவிட்டால், அவர்களுக்கு பாயிண்ட் குறையும். அவர்களது ஹார்ட்களை இழப்பார்கள்.. மேலும் இந்த மனஉளைச்சலை கொடுத்த டெவில்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்கள்.
பவித்ராவுக்காக குரல் கொடுத்த அருண்
இந்த டாஸ்கில் பவித்ரா வாயில் முட்டையை உடைத்து ஊற்றியும், முகத்தில் தேய்த்தும் மோசமாக நடந்துகொள்கிறார் மஞ்சரி. அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால் டெவில் க்ரூபில் இருக்கும் அருணுக்கு, அதை பார்க்கும் போது கோபம் வந்துள்ளது. மேலும் இது மிகவும் தவறு என்றும் கூறியுள்ளார்.
முத்துக்குமரன் உட்பட அதுதான் டாஸ்க் என்று கூறும்போது, டாஸ்க் ஆக இருந்தாலும், உளவியல் ரீதியாக தான் தோற்கடிக்க வேண்டுமே தவிர, உடல் ரீதியாக அல்ல. இது மிகவும் அருவருக்கும் விதமாக உள்ளது.
மேலும், ஒருவர் வாயிலிருக்கும் முட்டையை எப்படி, அவர் முகத்தில் தடவுவீர்கள்? கேம் என்றால் அதை கேம் ஆக விளையாடுங்கள்.. என்று கூறியுள்ளார்.
இந்த வேலையை செய்தது மஞ்சரி மட்டுமல்ல, சாச்சமா தேவியும் தான்.. அருண் இப்படி பேசுகையில், சாச்சனா முகத்தில் ஈ ஆகிவிட்டது. மேலும் அருண், இப்படி செய்தவரை தூக்கி ஜெயிலில் போட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அருணுக்கு தற்போது பெரும் ஆதரவு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.