சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரோகிணியின் கொட்டத்தை அடக்க வரும் ஜீவா, முத்துவுக்கு தெரியவரும் உண்மை.. மனோஜை விட்டு போகும் ஷோரூம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவிடம் ரோகிணி தான் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து பிரச்சினையை சரி செய்தார் என்று பார்வதி மூலம் தெரிந்து விட்டது. ஆனால் மீனாவிற்கு ரோகிணி மீது எந்த சந்தேகமும் இல்லாமல் அப்படியே முத்துவிடம் வந்து சொல்கிறார். ஆனால் முத்து இந்த விஷயத்தை கேட்டதும் எதற்காக இந்த பார்லர் அம்மா 2 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும்.

இருப்பதிலேயே கேடி பார்லர் தான், அதுவும் உனக்காக உன்னை காப்பாற்ற வேண்டும் என்று ரோகினி செய்ததுதான் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அதாவது ரோகினி செய்த தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி ரோகிணி செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் முத்துவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் மீனாவிற்கு முத்து என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை.

அப்பொழுது முத்து சொல்வது என்னவென்றால், பார்வதி அத்தை வீட்டில் அந்த 2 லட்ச ரூபாய் பணத்தை ரோகிணி தான் எடுத்து இருக்கணும். பிறகு இந்த விஷயம் வெளிவந்ததுக்குப்பின் எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அதே பணத்தை அவர் மூலமாக கொடுத்து பிரச்சினையை சரி செய்ய நினைத்திருக்கிறார் என்று ரோகிணி செய்த தில்லாலங்கடி விஷயத்தை அப்படியே மீனாவிடம் சொல்கிறார்.

ஆனால் மீனா அப்படியெல்லாம் ரோகிணி கிடையாது என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் முத்து இந்த விஷயத்தை அப்படியே நான் விடப்போவதில்லை, இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்று நான் கண்டுபிடிக்கிறேன் என்று முடிவெடுத்து விட்டார். அத்துடன் மீனா, இந்த விஷயத்தை கமுக்கமாக வைக்காமல் சுருதி முன்னாடி ரோகினிடம் நன்றி சொல்லி எனக்காக உன்னுடைய தாலி செயினை விற்று பார்வதி அத்தையிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததற்கு நன்றி என சொல்கிறார்.

அய்யய்யோ மீனாவுக்கு தெரிந்து விட்டதே என்று ரோகினி பயப்பட ஆரம்பித்து விட்டார். அதே மாதிரி பக்கத்தில் இருந்து சுருதி, ரோகிணி ஏன் அவருடைய இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து உங்களை காப்பாற்ற வேண்டும். இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனாலும் இந்த தத்தி மீனாவுக்கு மட்டும் ரோகிணி மீது சந்தேகமே வரவில்லை.

இதற்கு இடையில் முத்துவும் மீனவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்துவுக்கு கனடாவில் இருந்து ஜீவா போன் பண்ணுகிறார். நான் சென்னைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்து விடுவேன் நீங்க என்னை பிக்கப் பண்ண வந்து விடுங்கள் என்று சொல்கிறார். அந்த வகையில் இந்த முறை மனோஜ் மற்றும் ரோகிணி முத்துவிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

மனோஜ் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு ஜீவா கொடுத்த முப்பது லட்ச ரூபாய் பணம் தான் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. இதுவரை பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி வந்த ரோகிணி தற்போது எல்லா பக்கத்திலும் செக் வைத்தது போல் மாட்டி கொள்ளப் போகிறார். இனிதான் இந்த முத்துவின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப ரோகிணியின் குடிமி முத்துவிடம் சிக்க போகிறது.

Trending News