சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராதிகாவிடம் பாக்யா பற்றி பெருமையாக பேசும் கோபி.. ஈஸ்வரிடம் முதல் முறையாக துணிந்து சவால் விட்ட மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவிடம் ஏன் இவ்ளோ கடுமையாக நடந்து கொள்கிறீர்கள், என்னதான் இருந்தாலும் உங்க பையனுடைய மனைவி அவங்க தான். அவங்களே பார்க்க கூடாது என்று சொல்வது ரொம்பவே தப்பானது என ஈஸ்வரிடம் பாக்யா சொல்லி புரிய வைக்கிறார். ஆனால் ஈஸ்வரி நீ என்ன சொன்னாலும் சரி என் பையன் விஷயத்தில் நான் தான் முடிவெடுக்கணும்.

வேற யாரும் தலையிடக்கூடாது என்று சொல்லி பாக்யாவின் வாயை அடைக்கிறார். அதற்கு பாக்கியா, நீங்க இப்போ தடுத்தாலும் உங்க பையன் கண் முழித்ததும் அவங்க வீட்டுக்கு போய் தான் ஆகணும். ராதிகா கூட இருந்து அப்போ எல்லாம் பார்த்துப்பாங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி, என் மகன் ஏன் அவ வீட்டுக்கு போகணும். அங்கெல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்கிறார்.

உடனே பாக்கியா என்ன பண்ணப் போறீங்க என்று கேட்கிறார், அதற்கு ஈஸ்வரி என் பையனை நான் இங்கே கூட்டிட்டு வந்து எல்லாமே பக்கத்தில் இருந்து பார்த்து சரியாக்குவேன் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன பாக்கியா, இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாது. இது அவரோட வீடும் கிடையாது, என்னாலையும் வச்சு பார்க்க முடியாது. எனக்கு அந்த அவசியமே கிடையாது என்று ஈஸ்வரிடம் பதிலடி கொடுக்கிறார்.

ஆனால் ஈஸ்வரி, நீ எதுவும் பண்ண வேண்டாம். நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். எது எப்படியானாலும் சரி உங்க பையன் இங்கே வரக்கூடாது என்று பாக்கியா திருப்பி பேசுகிறார். நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என் பையனை விட்டுட்டு பிரிந்து இருக்க முடியாது. ஏற்கனவே ஒரு உசுர பறிகொடுத்து விட்டு நான் தவித்து வருகிறேன்.

என் பையனையும் அப்படி விட்டுவிட முடியாது என்று ஈஸ்வரி சொல்கிறார். உடனே பாக்யா, நீங்க உங்க பையனை பார்த்துக்கோங்க என்ன வேணாலும் செய்ங்க. ஆனால் இந்த வீட்டில் எதுவும் பண்ணக்கூடாது என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி வீடு உன்னுடைய பெயரில் இருக்கிறது என்ற திமிரில் பேசுகிறாயா? என்று கேட்கிறார். அதற்கு உங்களை மாதிரி நிமிஷத்துக்கு மனசை மாத்திக்க முடியாது.

அன்னைக்கு அவ்வளவு தூரம் மாமா இறந்து வீட்டுக்குள் பிரச்சனை பண்ணி என்ன எல்லா காரியமும் செய்ய சொன்னீங்க. ஆனால் அந்த கோபத்தையும் அவர் என் மீது தான் காட்டினார். அப்படி இருக்கும்போது இப்பொழுது வந்து என் பையன் என்று உருகுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். உங்கள் பையன் மேல உங்களுக்கு அவ்ளோ பாசம் இருந்தால் தயவு செய்து இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க என்று சொல்கிறார்.

ஆனாலும் ஈஸ்வரி நான் இங்குதான் கூட்டிட்டு வருவேன் என்று சொல்லிய நிலையில் பாக்கியா நான் உள்ளே விடமாட்டேன் என்று சவால் விடும் அளவிற்கு துணிந்து விட்டார். அடுத்ததாக கோபிக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு ராதிகா ஒத்த பைசா கூட கொடுக்கக் கூடாது. எல்லாமே என்னுடைய பணமாக இருக்க வேண்டும் என்று ஈஸ்வரி அவரிடம் இருக்கும் பணத்தை செழியன் இடம் கொடுத்து ஹாஸ்பிடலில் கட்ட சொல்கிறார்.

அதற்கு செழியன் பணம் எதுவும் வேண்டாம் என்னுடைய சேவிங்ஸ் பணம் இருக்கிறது. அதை வைத்து நான் அப்பாக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். உடனே ஜெனி, அந்த பணத்தை பாக்கியா அத்தை கஷ்டப்படும் பொழுது எடுத்துக் கொடு என்று சொல்லும் பொழுது உன் மனசு இறங்கவில்லை. இப்பொழுது உங்க அப்பாக்கு என்று சொன்னதும் செலவு பண்ணதுக்கு மனசு வருகிறதா என்று கேள்வி கேட்கிறார்.

உடனே செழியன் அது வேற இது வேற என்று சொல்லி எங்க அப்பாவை நான் பார்த்துக் கொள்வேன் என திமிராக பேசிவிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக ராதிகா, கோபியை பார்ப்பதற்கு போய்விடுகிறார். ஆனால் கோபி, ராதிகாவிடம் உனக்கு நான் போன் பண்ணும் பொழுது நீ எடுக்கவே இல்லை. அத்துடன் மற்ற எல்லாத்துக்கும் நான் போன் பண்ணினேன். யாருமே என்னிடம் பேச தயாரா இல்லை.

ஆனால் ஒரே ஒரு போன் தான் பாக்கியாவுக்கு பண்ணினேன், அந்த நிமிஷமே என்னை வந்து காப்பாற்றி விட்டார். இப்பொழுது தான் குடும்பம் என்றால் என்ன என்பது எனக்கு புரிந்திருக்கிறது. நான் எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும் பாக்கியா அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை காப்பாற்றி இருக்கிறாள் என்று ராதிகாவிடம் பாக்கியாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் ராதிகா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

Trending News