அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு இந்த படம் fahadh fasil ஷோவாக இருக்கும் என்று தான் பேசப்பட்டது. ஆனால் அவரது ரசிகர்களுக்கு படம் பார்த்த பிறகு, இப்படி டம்மி ஆக்கிவிட்டார்களே என்ற பீல் தான் இருந்தது.

இன்று ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வரும் புஷ்பா 2 படத்தை ஒரு சிலர் நெகட்டிவ் ஆகவும் விமர்சனம் செய்து வருகிறார்கள். கதை திரைக்கதை இருந்தாலும் கூட, படத்தில் நிறைய லாஜிக்கல் error இருப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில், ஒரு சில ரசிகர்கள் இந்த படம் ஓடும் தியேட்டரிலும் சென்று அலப்பறையை கிளப்பியுள்ளார்கள்.

என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..

பொதுவாக விஜய் பற்றி பேசும்போது, தல ரசிகர்கள் வந்து கடவுளே அஜித்தே என்று கோஷமிடுவது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் நேரத்தில் அங்கு சென்று தனது தலைவனின் பெயர் சொல்வது கூட தற்போது ஒரு ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் ஒன் மேன் ஷோவாக நடித்து கொண்டு இருக்கும்போது, ஒரு சில இளைஞர்கள் திரைக்கு முன்பு சென்று தளபதி விஜயின் போட்டோவை எடுத்து காட்டி.. தளபதி என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இது மற்ற ரசிகர்களுக்கும், தியேட்டரில் படம் பார்க்க வந்த குடும்பத்தினருக்கும் கடுப்பை கிளப்பியுள்ளது. சமீப காலமாகவே, விஜய் ரசிகர்கள் மட்டும் ஏன் இவ்வளவு ugly-யாக ‘நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது.

அதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலே ஒரு சில ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவரோ அரசியலுக்கு செல்கிறார். பிறகு ஏன் தியேட்டரில் இந்த அலப்பறை என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment