வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட 6 நடிகைகள்.. எப்பா, லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

பொதுவாக சினிமாவில் வெற்றி கொடி கட்டுபவர்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை அவ்வப்போது சந்திப்பார்கள். குறிப்பாக விவாகரத்து என்பது, மிகவும் பிரபலமான ஒன்றாக சமீப காலமாக மாறி வருகிறது.

அப்படி தென்னிந்திய நடிகைகள் ஒரு சிலர் முதல் திருமணம் தோல்வியில் முடிந்த பிறகு, இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். மேலும் அதில் மகிழ்ச்சியாக ஒரு சிலர் வாழ்ந்தும் வருகின்றனர்.

நடிகை ஊர்வசி: நடிகை ஊர்வசி தற்போது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். ஆரம்ப காலத்திலிருந்தே, இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக இவர் இவரது அக்கா கல்பனாவை விட, சிறப்பாக மேலோங்கி வந்தார். இருப்பினும் அக்காவுக்கு மரியாதை கொடுக்காத இடத்திற்கு இவர் செல்லமாட்டார்.

அப்படி இருக்கும்போது, முதலில் இவர் மலையாள நடிகர் மனோஜ்.கே.ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதை தொடர்ந்து சிவப்ரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை லட்சுமி: அதிகமான விமர்சனத்துக்கு உள்ளான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை லட்சுமி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்து, இரண்டும் தோல்வியில் முடிந்து, அதன்பிறகு, மூன்றாவது திருமணமும் செய்துகொண்டார்.

கடைசியாக சிவச்சந்திரனுடன் இணைந்து வாழ்ந்தார். இவர்கள் சம்யுக்தா என்ற ஒரு மகளையும் தத்தெடுத்து வளர்த்தார்கள்.

நடிகை ராதிகா: நடிகை ராதிகா இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை. ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமாக இருந்த இவர், மார்க்கெட் சரிய ஆரம்பித்தபோது, சீரியல் பக்கம் தாவிவிட்டார்.

மேலும் தொடர்ந்து தற்போது நல்ல charecter ரோல்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் பிரதாப் ஹோத்தனை திருமணம் செய்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து நடந்தது.

இதை தொடர்ந்து, வெளிநாட்டவரான ரிச்சர்ட் ஹெர்டி என்பவரை திருமணம் செய்து அதுவும் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்தார்.

அதிதி ராவ்: தமிழில் சைக்கோ, காற்று வெளியீடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.

இவர் முதலில், தனது 23 ஆவது வயதில், சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்த நிலையில், அது தோல்வியில் முடிய தற்போது சித்தார்த்தை திருமணம் செய்துள்ளார்.

அமலா பால்: மைனா படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வந்தார். தனது கேரியரில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் திடீரென இயக்குனர் எ.எல். விஜயை திருமணம் செய்தார்.

ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவகாரத்தில் முடிய, இரண்டாவதாக தொழில் அதிபர் ஐசக் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

எமி ஜாக்சன்: தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்தார்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமணத்தில் இணையாமல் போக, இதை தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து கரம்பிடித்தார்.

Trending News