ஜவான், பதானை பதம் பார்த்த புஷ்பா 2 .. புஷ்பா-2 முதல் நாள் Box Office கலெக்ஷன்

இந்திய சினிமாவில் பாலிவுட்தான் முதன்மையாகவும் பிரமாண்டமாகவும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனிலும் ஜொலித்தது.

இந்தியில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் 2023 ல் வெளியான ஜவான் படம் முதல் நாள் 64 கோடி வசூல் செய்தது.

ஜவான் பட ரெக்கார்டை முறியடித்த புஷ்பா 2

இதை, சுகுமார் இயக்கத்தில்,அல்லு அர்ஜீனின் புஷ்பா 2 படம் முறியடித்தது. அதன்படி முதல் நாளில் மட்டும் இந்தியில் 67.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

நேற்று ரிலீசான புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.265 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை வெளியான இந்திய சினிமாவிலும், இந்தி சினிமாவிலும் புஷ்பா 2 படத்துக்குத்தான் பெரிய ஓபனிங் என பேசப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களிலும் அதிக வசூல் குவியும். உலகளவில் ஜவான், பதான், ஆர்.ஆர்.ஆர், சலார், கல்கி போன்ற படங்களின் சாதனைகளையும் விரைவில் முறியடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment