சீரியல், ரியாலிட்டி ஷோ, சினிமா என எதிலும் தலை காட்டாமல் மொத்தமாய் துவண்டு போய் இருக்கிறார் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து தன் கேரியரை தொடங்கிய நந்தினிக்கு அடுத்தடுத்து ஏறு முகங்கள் தான்.
சரவணன் மீனாட்சி சீரியலால் மைனா நந்தினி என இவருக்கு அடையாளம் கிடைத்தது . அதன் பின் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3 ,அரண்மனை 3 என சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கினார்.
கடந்த ஓராண்டாக எதிலும் கமிட்டாகாமல் ஒதுங்கி இருந்தார் மைனா நந்தினி. இதற்கு காரணம் அவர் ஒரு youtube சேனல் ஆரம்பித்தார். அது நன்றாக போய்க் கொண்டிருந்தது 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்களுக்கு மேல் அவருக்கு கிடைத்திருந்தனர்.
மைனா விங்க்ஸ், லவ் ஆக்சன் ட்ராமா என யூடியூப் சேனல்கள் நடத்தி வந்த இவருக்கு இப்பொழுது அதில் வரவேற்பு குறைந்துள்ளது. இதனால் வெப் தொடர எடுக்கலாம் என அதையும் கையில் எடுத்தார். புள்ளத்தாச்சி என்ற வெப் தொடரை இயக்கி வந்தார்.
இப்பொழுது அந்த வெப் தொடரின் அடுத்த கட்டம் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இந்தியா திரும்பியுள்ளனர். ஆனால் வரும் வழியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்து மொத்தமும் நொறுங்கியது. இதே போல் தான் லால் சலாம் படத்திற்கும் ஹார்ட் டிஸ்க்் வீணானது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் கூறினார்
800 ஜிபி டேட்டா முழுவதும் வீணா போனது . இதனால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறார் மைனா நந்தினி. சம்பாதித்த மொத்த காசையும் இந்த வெப் தொடரில் போட்டு பெரிய இன்னலுக்கு ஆளாகியுள்ளார் மைனா நந்தினி.