லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கூலி படத்தின் ஷூட்டிங்கை இப்பொழுது திருவல்லிக்கேணியில் எடுத்து வருகிறார். எப்பொழுதுமே அந்த ஏரியா மிகவும் நெரிசலாக காணப்படும் இப்பொழுது ரஜினி படம் சூட்டிங் நடப்பதால் மொத்த ஏரியாவும் ரங்கநாதன் தெருவை விட டபுள் மடங்காக காணப்படுகிறது..
திருவல்லிக்கேணியில் அரை எடுத்து தங்குவதற்கு நிறைய மேன்சங்கள் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட காட்சிகளை தான் இப்பொழுது எடுத்து வருகிறார். ரஜினி சில பேரை அங்கே சென்று தேடுகிறாராம், அங்கே ஒரு பிரமாண்ட சண்டை காட்சியையும் படமாக்கிக் கொண்டிருக்கிறார் லோகேஷ்.
இது ஒரு புறம் இருக்க தினமும் படத்தில் புதுப்புது கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கிறார்களாம். லோகேஷ் திடீரென ஏதாவது ஒரு நடிகரை கூட்டி வந்து நடிக்க வைக்கிறாராம். இரண்டு மூன்று நாட்கள் கால் சீட் வாங்கிக் கொண்டு ஒரு மினி கேமியோ பண்ண வைத்து விடுகிறாராம்.
இப்படித்தான் நிறைய நடிகர்கள் வந்து இரண்டு மூன்று நாட்கள் நடித்து செல்கின்றனர். உபேந்திரா, நாக சைதன்யா போன்ற நடிகர்கள் இதில் நடித்து வருகிறார்கள். எல்லோருக்கும் பெரிய ரோல் என்று இல்லாமல் குறுகிய நாட்கள் கால் சீட் கொடுத்து அவரவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செய்து முடித்து செல்கின்றனர்.
இந்த படத்தில் இப்பொழுது புதுவராக சந்திப் கிஷான் இணைந்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்திப். அந்த நெருக்கம் தான் இவரை கூலி படம் வரை கூட்டி வந்திருக்கிறது.