Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், ரகுராம் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் மனம் உடைந்து போய் தன்னந்தனியாக அவருடைய வீட்டில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் புவனேஸ்வரி அவருடைய ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்களை ஒவ்வொன்றாக பிரித்துக் காட்ட வேண்டும் என்று சபதம் போட்டிருக்கிறார்.
அந்த வகையில் பார்வதியின் மாமாவை தூண்டிவிட்டு பார்வதியிடம் பேச வைத்து சொத்தை பிரிப்பதற்கு பிளான் பண்ணிவிட்டார். பார்வதியும் சிவராமன் சொத்தை எங்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று ரகுராமிடம் கேட்டு விட்டார். உடனே ரகுராம் எந்தவித யோசனையும் இல்லாமல் சொத்தை பிரிப்பதற்கு வக்கீலிடம் ஏற்பாடு பண்ண சொல்லிவிட்டார்.
சொத்துக்காக குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய உண்மையான குணத்தை காட்டி வருகிறார்கள். பத்மா லாயருக்கு போன் பண்ணி இந்த வீட்டை என்னுடைய பெயருக்கு எழுதி வையுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அதே மாதிரி இந்த வீட்டுக்கு பார்வதியும் ஆசைப்பட்டு காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த சொத்தை பிரித்து விடக்கூடாது என்ற நினைப்பில் மாயா சில முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்ததாக லாயர், ரகுராம் வீட்டிற்கு சொத்தை பிரித்து விட்டு கையெழுத்து கேட்பதற்கு வந்து விட்டார். வந்த சமயத்தில் ரகுராம் இருக்கும் அந்த வீட்டுக்காக பார்வதி மற்றும் பத்மா சண்டை போட்டு அடித்துக் கொள்கிறார்கள்.
கடைசியில் யாருக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கிக்கோங்க நான் கையெழுத்து மட்டும் போட்டு விடுகிறேன் என்று ராகுரம் சொல்லிய நிலையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கான சொத்தை வாங்குவதற்கு கையெழுத்து போட்டு முடித்து விட்டார்கள். கடைசியில் ரகுராமும் சொத்தில் கையெழுத்து போட வரும் பொழுது மாயா அங்கிருந்து வந்து தடுத்து நிறுத்தி விடுகிறார்.
உடனே பத்மா நீ ஏன் எங்களுடைய குடும்ப விஷயத்தில் தலையிடுகிறாய். உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், ரத்த சொந்தம் இருந்தால் மட்டும்தான் சொத்தை பிரிக்க கூடாது என்று சொல்ல உரிமை இருக்கிறது. உனக்கு எந்த உரிமையும் இல்லை ஓரமாக இருந்து வேடிக்கை மட்டும் பாரு என்று மாயவை திட்டுகிறார்கள்.
ஆனால் மாயா எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, ரத்த சொந்தமும் இருக்கிறது என்று சொல்லி கோவிலில் மாயாவை மகளாக ரகுராம் தத்து எடுத்த பத்திரங்களை கொண்டு வந்து லாயரிடம் கொடுக்கிறார். லாயரும், இந்த பத்திரத்தின் படி மாயாவும் இந்த குடும்பத்தில் ரத்த சொந்தத்தின் உறவினராக இருக்கிறார்.
அதனால் சொத்தை பிரிக்க வேண்டும் என்றால் மாயாவின் முழு சம்மதமும் வேண்டும் என்று சொல்லி அங்கிருந்து சொத்தைப் பிடிக்காமல் லாயர் கிளம்பி விடுகிறார். இது எதுவும் தெரியாத புவனேஸ்வரி ரகுராம் வீட்டில் சொத்தை பிரித்து விட்டு சொந்தங்கள் எல்லாம் தனியாக போய் இருப்பார்கள்.
இனி ஜானகி மற்றும் ராகுரம் சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் மாயா இருக்கும் வரை ரகுராம் குடும்பத்தில் யாராலையும் எந்த கலகத்தையும் உண்டாக்க முடியாது என்பதற்கு ஏற்ற மாதிரி காவலாக நிற்கிறார்.
இதனை அடுத்து மாயா எதற்காக தனத்திற்கு கதிருடன் கல்யாணத்தை பண்ணி வைத்தார் என்ற விஷயமும் ரகுராம்க்கு தெரிய வந்துவிட்டால் இன்னும் இந்த நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். இருந்தாலும் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சந்தியா ராகம் சீரியல் 5.64 புள்ளிகளைப் பற்றி ஜீ தமிழில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது.