Attakathi Dinesh : இந்த வருடம் வெளியான லப்பர் பந்து படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் அட்டகத்தி தினேஷ். கிட்டத்தட்ட 40 வயதான இவர் இப்போதும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய முதல் படம் அட்டகத்தி மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதேபோல் வெற்றிமாறன், தினேஷ் கூட்டணியில் வெளியான விசாரணை படமும் கொண்டாடப்பட்டது. ஆனாலும் அவருக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைக்காமல் இருந்தது.
ஆனால் லப்பர் பந்து படத்தின் மூலம் தனது கேரியரில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தில் கெத்து கதாபாத்திரம் மூலம் முத்திரை பதித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அட்டகத்தி தினேஷ் பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த கேரக்டரில் நடித்ததற்கு வருத்தப்படும் அட்டகத்தி தினேஷ்
இந்த கேரக்டர் பன்னிருக்கவே கூடாது என்று இப்போது வரை வருத்தப்படுவதாக கூறியுள்ளார். அதாவது குக்கூ படத்தில் கண் தெரியாதவராக நடித்திருப்பார். இதில் கண்ணை சிமிட்டாமல் நடித்ததால் பல தொந்தரவில் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அதாவது கண் பிரச்சனையால் தலைவலி, கண்ணுல அப்பப்போ தண்ணி வந்துகிட்டே இருந்ததாம். அஞ்சு வருஷமா இது தொடர்ந்து இருந்ததாகவும் இப்போது வரை எனக்கு கண்ணில் பிரச்சனை இருக்கிறது என்று தினேஷ் கூறியிருக்கிறார்.
அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் பன்னிருக்க வேண்டாம் என்று நினைப்பதாக தற்போது வரை வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.