சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அண்ணாமலையை வேலையில் விட வந்த முத்து.. மகனை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரும் ரோகினி, பயத்தில் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் வீட்டை கண்டுபிடித்த முருகன், முத்து கொடுத்த ஐடியாவின் படி பொண்ணு கேட்க தாம்பூல தட்டுடன் அண்ணாமலை வீட்டுக்கு புகுந்து விட்டார். அங்கே போனதும் மீனாவின் அப்பா தான் அண்ணாமலை என்று நினைத்து உங்க மகளை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மாசம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.

உங்க மகளை எனக்கு பிடித்ததால் பொண்ணு கேட்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை என் மகள் யார் என்று கேட்ட பொழுது மீனா தூரத்தில் இருந்து சாமி கும்பிட்டு இருப்பதை பார்த்ததும் முருகன் அவங்க தான் என்று மீனாவை பார்த்து கையை காட்டுகிறார். உடனே அங்கே இருந்த ரவி மற்றும் சுருதி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

முத்து உள்ளே இருந்து வந்த நிலையில் முருகன் நீ எங்கே இங்கே என்று கேட்கிறார். உடனே முருகன், அண்ணா உங்க வீடா இது என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை உங்க அண்ணன் யார் என்று கேட்ட நிலையில் முத்துவை காட்டி இவர் தான் என்னுடைய அண்ணன் என்று சொல்கிறார். உடனே அங்கே வந்த மீனா, முருகனைக் காட்டி இவர்தான் என்னை பாலோ பண்ணுகிறார் என்று சொல்கிறார்.

பிறகு முத்து நீ யாரை காதலிக்கிறாய் என்று கேட்ட பொழுது மீனாவை காட்டி இவங்க தான் நான் காதலிக்கும் பெண் என்ற சொல்கிறார். அத்துடன் முத்து கொடுத்த ஐடியா படி தான் நான் எல்லாமே செய்தேன் என்று சொல்லிய நிலையில் அனைவரும் முத்துவை பார்க்கிறார்கள். பிறகு முருகன், அண்ணாமலையிடம் போய் பொண்ணு கேட்டு பேசுகிறார்.

அதற்கு அண்ணாமலை, இந்த விஷயத்தில் நான் முடிவெடுப்பதை விட முத்து முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும் என்று சொல்லி போய் விடுகிறார். பிறகு முத்து, அந்த பெண் கழுத்தில் இருப்பதை பார்க்கவில்லையா? என்று கேட்கும் பொழுது முருகன் நான் அந்த பெண்ணின் கண்ணைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை என்று சொல்கிறார்.

உடனே முத்து பாரு கொஞ்சம் என்று சொல்லியதில் முருகன் பார்த்தவுடன் கழுத்தில் மஞ்ச கயிறும் நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அவள் என் பொண்டாட்டி என்று சொல்லும் பொழுது முருகன் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி முத்துவின் காலை பிடித்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்றால் மீனா பிசினஸ் பண்ணுவதற்காக பூ டெக்ரேசன் பண்ணி மார்க்கெட்டிங் பண்ணும் போது மீனாவை போட்டோ எடுத்து சுருதி அதை சோசியல் மீடியாவில் அப்டேட் போட்டிருந்தார்.

அதை பார்த்து முருகன் கல்யாணமாகாத பொண்ணு என்று காதலிக்க ஆரம்பித்து விட்டார். பிறகு இந்த விஷயத்திற்கு மீனா முத்துவிடம் செல்ல சண்டை போட்டு சமாதானம் ஆகிவிட்டார்கள். இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அப்பொழுது விஜயாவை உட்கார வைத்து பெருமைப்படுத்தும் விதமாக மனோஜ் அவருடைய சந்தோசத்தை சொல்கிறார்.

அதாவது பிசினஸில் எனக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கிறது. சந்தோஷ் சார் டீலர்ஷிப் மூலம் எனக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். உடனே இதுதான் சான்ஸ் என்று விஜயா, மனோஜை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி பேசுகிறார்.

முத்து வழக்கம்போல் நக்கலாக பேசிய பொழுது முத்துவை நோஸ்கட் பண்ணும் அளவிற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது புத்திசாலித்தனமும் அறிவும் வேண்டும் என்று சொல்லி மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணி ரோகிணி முத்துவை அவமானப்படுத்தி பேசி விட்டார். உடனே முத்து இதற்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்கு என்று சொல்லாமல் பார்வையாலே பார்த்து விட்டார்.

அடுத்ததாக அண்ணாமலை வேலை பார்க்கும் ஸ்கூலில் முத்து விடுவதற்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் முத்துவும் அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிரிஷை கூட்டிட்டு ரோகிணி அதே ஸ்கூலுக்கு வந்து விடுகிறார். உடனே முத்துவையும் அண்ணாமலையும் பார்த்த ரோகினி கிரிஷை கூட்டிட்டு ஒளிந்து விடுகிறார்.

பிறகு முத்து அங்கிருந்து போனதும் அண்ணாமலை ஸ்கூலுக்குள் போய்விடுகிறார். ரோகிணி அந்த ஸ்கூலில் இருக்கும் வாட்ச்மேன் இடம் அண்ணாமலை காட்டி இவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று கேட்கிறார்.

அதற்கு அந்த வாட்ச்மேன் இவர் இங்கே அக்கௌன்ட் வேலையாக புதுசாக சேர்ந்திருக்கிறார் என்று சொன்னதும் பயப்பட ஆரம்பித்து விட்டார். இந்த சூழலில் கிரிஷை வேற ஸ்கூலிலும் மாற்ற முடியாது. இதே ஸ்கூலில் படித்தாலும் அண்ணாமலை பார்த்துவிட்டு பிரச்சினையாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News