ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆதவ் அர்ஜுனனின் அனல் பறக்கும் பேச்சு, ரசித்துப் பார்த்த புஸ்ஸி.. இயற்கை பட ஷாம் ஞாபகம் வருதுங்ணா

Adhav Arjun: நேற்று சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் பல விஷயங்கள் குறித்து மேடையில் பேசினார்.

அதேபோல் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் பேசியதும் வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது.

2026 தேர்தலில் அதை ஒழிக்க வேண்டும் என கூறினார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டலும் ஆரவாரமும் வந்தது.

ஆதவ் அர்ஜுனின் அனல் பறக்கும் பேச்சு

மேலும் அவருடைய இந்த பேச்சை கேட்ட விஜய்யின் வலது கரம் புஸ்ஸி ஆனந்த் ரசித்து சிரித்தார். இதை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால் விரைவில் ஆதவ் அர்ஜுன் விஜய் கட்சிக்கு வரலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்படி வந்தால் புஸ்ஸி ஆனந்த் புஸ்ஸாகிப் போய்விடுவார்.

தன்னுடைய இடம் காலியாக போகிறது என்று கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்தால் இயற்கை பட ஷாம் ஞாபகம் தான் வருகிறது.

இப்படியாக இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் நேற்றைய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

- Advertisement -

Trending News